பக்கம்:பாட்டுத் திறன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பாட்டுத் திறன் பூனையின் உள்ளுறுப்புகளை இணைக்கும் வெளிச்செல் நரம்பு கார்களை (பரிவு நரம்புகளை) வெட்டினார்; இதனால் உள்ளு அப்புகளில் எவ்வித மாற்றங்களும் நிகழ்வது சாத்தியமில்லை. இந்த அறுவை மருத்துவத்திற்குப் பின்னரும் அச் சோதனைப் பூனை உள்ளக்கிளர்ச்சி அநுபவக் குறிகளைக் காட்டியது. மேலும், ஈண்டு ஷெர்ரிங்க்டனின் சோதனைக்கு எதிராக எழுந்த மறுப்புகள் நிலைகிற்கின்றன. அப் பிராணியின் நடத்தையி லிருந்து சினத்தைப் புலப்படுத்துவதற்கு உடல்நிலை ஒரு முக்கியப் பகுதியன்று என்று நாம் ஓரளவு அறுதியிடலாம். மனிதர்களிடம் இத்தகைய உள்ளக் கிளர்ச்சி அநுபவம் கேரிட்டால்தான் அதனை ஓரளவு சரியான சான்றாகக் கொள்ள லாம். அறிதிறன் மிக்க நாற்பது அகவை கிறைந்த பெண்மணி ஒருவருக்கு கேரிட்ட குதிரைச் சவாரி விபத்தொன்றில் அவரு டைய கழுத்து முறிவுற்றது. கழுத்துப் பகுதியிலுள்ள முதுகு கடுநரம்பு முறிவுற்றதால் மூளைக்கும் உடல் உறுப்புகள் ஆகிய வற்றிற்கும் இடையேயுள்ள புலனுணர் இயக்க நரம்புகள் வழி களையெல்லாம் தடுத்துவிட்டன. ஆனால், தன்னாட்சி நரம்பு மண்டலத்தின் மேற் பகுதியிலிருந்து சில உள்ளுறுப்புக்களை இணைக்கும் நரம்புகள் மட்டிலும் சிதைவுறவில்லை, மேற்படி நரம்பு மண்டலத்தின் நடுப்பகுதியாகிய பரிவுகரம்புமண்டலம் முற்றிலும் மூளையிலிருந்து தொடர்பற்றுப்போனதால். உடலி லும் உறுப்புகளிலுமுள்ள புலன் உணர்ச்சி'களனைத்தும் நீங்கின. ஜேம்ஸ்-லாங்க் கொள்கைப்படி உள்ளக் கிளர்ச்சி யநுபவம் முழுவதும் நீக்கப் பெறல் வேண்டும்; ஆயினும். அவ் விபத்து ஏற்பட்ட பிறகு ஓராண்டு அப் பெண்மணி உயிருடன் இருந்தபொழுது அவளிடம் துக்கம், மகிழ்ச்சி, அன்பு போன்ற உள்ளக்கிளர்ச்சிகள் இருந்ததாகவே நரம்பு மருத்துவ வல்லுநர் கூறுவர். இந்தச் சான்றிலிருந்தும் உள்ளக் கிளர்ச்சியநுபவம், உடல் உறுப்புக்களிலிருந்தெழும் புலன் காட்சிகளின்றியே மூளையில் எழுதல் கூடும் என்பதை நாம் அறிகின்றோம். இவ்விடத்தில் இன்னொரு வினா எழுகின்றது. அச்சம் அல்லது சினத்திற்கு வெளிக்காரணமின்றி அவ்வுள்ளக்கிளர்ச்சி 13. qevsir * * ***-Sensation.