பக்கம்:பாட்டுத் திறன்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் jjā; கொள்கையோ உள்ளக்கிளர்ச்சி யநுபவத்திற்கும் உள்ளக் கிளர்ச்சி நடத்தைக்குமுள்ள உறவினை முழுதும் திருப்தியான முறையில் விளக்கம் தரவில்லை. ஜேம்ஸ்-லாங்க் கொள்கை இன்றியமையாத கூறுகள் என்று கூறும் உடல் மாற்றங்களை காம் அடிக்கடி உணரத்தான் செய்கின்றோம். இதனால் உள்ளுறுப்புப் பகுதிகளும் என்புத்தசைப் பகுதிகளும் பங்கு பெறுகின்றன என்பது பெறப்படுகின்றது. எனவே, நாம் ஜேம்ஸ்-லாங்க் கொள்கையினை முற்றிலும் புறக்கணிப்பதற் கில்லை. அங்ஙனமே, மேற்பூத்தண்டுக் கொள்கையினையும் தள்ளிவிட முடியாது. காரணம், அது உள்ளக்கிளர்ச்சிக்குரிய 65) ԼՁԱՔԱ}: Յ5 இருப்பினும் இராவிடினும், உள்ளக்கிளர்ச்சி நடத்தைக்குப் பெருந்துணை புரிகின்றது. இந்த இரண்டு கொள்கைகளிலுள்ள சில கூறுகளையும் பிற கொள்கைகளி லுள்ள சில கூறுகளையும், இவற்றைத் தவிர வேறு சில கூறு களையும் இணைத்த ஒரு கொள்கையால்தான் உள்ளக்கிளர்ச்சி பற்றிய தெளிவான விளக்கம் தர இயலும். சில சிக்கலான சக்தர்ப்பங்களால் உண்டாக்கப்பெறும் குழப்பமும் முடிவுக்கு வாரா நிலையுமே உள்ளக்கிளர்ச்சியாகும் என்று கூறலாம். அத்தகைய செயலில் (புலனுணர்ச்சிக் கூறில்) புறணி மையங் களும் நரம்புமண்டலத்தின் கீழ்மையங்களைக் கட்டுப்படுத்தும் முறையில் மேற்பூத்தண்டும் இயல்பாகவே பங்குபெறுகின்றன. உள்ளக்கிளர்ச்சியுள்ள கிலைகளில் பெருமூளையின் புறணிக்கும் மேற்பூத்தண்டிற்கும் விரைவான செய்திப் போக்கு- வர்வுகள் நடைபெறுகின்றன என்பதற்கு கவீன நரம்பியலிருந்து சான்று கள் கிடைக்கின்றன.ஒருவேளை மேற்பூத்தண்டின் கிளர்ச்சியால் உடல்மாற்றங்கள் எழலாம். மேல் மையங்களுக்கும் கீழ்மையங் களுக்கும் இடையே முன்னும் பின்னும் நடைபெறும் செய்திப் போக்கு- வரவுகளும் முடிவிற்கு வாராகிலைமையும் காரணமாக உள்ளக்கிளர்ச்சி எழுதல் கூடும்; இஃது இந்தப் பெரிய குழப்ப நிலையால் புலனாக்கப்பெறுகன்றது. படி வளர்ச்சிக் கொள்கை யால் ஒரு படிவளர்ச்சி உண்ம்ையினையும் அறிகின்றோம். உயிரியின் கட்டுப்பாடு மேற்பூத்தண்டின் ஆட்சிக்கு அப்பாற் போய்விட்டதாலும், அதே சமயத்தில் புதிய ஆட்சிப் பகுதியான பெருமூளையின் புறணியும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தலைவனாகவிருந்து கட்டுப்படுத்த முடியாமையாலும் ஏற்பட்ட 82. கதம்பியல் . Neurology.