பக்கம்:பாட்டுத் திறன்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பாட்டுத் திறன் புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கிற்கும் உறுப்பாகக் கொள்ளுதல் தொன்றுதொட்டு வரும் தமிழிலக்கண மரபாகத் திகழ்கின்றது. இம்மரபினை உளங்கொண்ட தொல்காப்பியனார் இம் மெய்ப்பாடுகளைப் புலனெறி வழக்கமாகிய செய்யுளுக்குரிய உறுப்புகளுள் ஒன்றாகக் கொண்டார். இதன் தன்மை முதலிய வற்றையெல்லாம் சுவைகள்' என்னும் தலைப்பில் பின்னர் ஆராயப் பெறும்.’’ ஆண்டுக் கண்டு அறிக. சண்டுக் குறிப்பிட்ட அச்சம் முதலாக வரும் மெய்ப்பாடுகளையே உளவியலார் "உள்ளக்கிளர்ச்சிகள்’ என்று வழங்குவர். விறல் என்பதே உடல்நிலை மாறுபாடுகளாகும். சுவைப்பொருள் என்பது து.ாண்டலை விளைவித்துத் துலங்கலை எழுப்பும்பொருள் (object). காம் இப்போது பொருளை நுகருங்கால் நம்மிடையே உண்டாகும் பொறியுணர்வையே உளவியலார் புலன்காட்சி: எனக் குறிப்பிடுவர். இங்ங்னம் உள்ளக்கிளர்ச்சியினை எழுப்பு வதற்குக் காரணமான பொருள், புலன்காட்சி, பொது உணர்வு (அநுபவம்), உடல் சிலை மாறுபாடுகள் என்று உளவியலார் கூறுவனவற்றைப் பண்டைத் தமிழறிஞர்கள் சுவைக்கப்படும் பொருள், பொறியுணர்வு. குறிப்பு, விறல் என்று மிக துட்ப மாக விளக்கியுள்ளமை எண்ணி மகிழ்தற்குரியது. 38. இந்நூல் இரண்டாம் பகுதியில். 37 , உடல் நிலை unsourGoer-Organic states 38. Hasi arta-Perception,