பக்கம்:பாட்டுத் திறன்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாட்டுத் திறன் வெளிப்பட்டு, தசைத்துலக்கம் அல்லது சுரப்பித்துலக்கத்தை உண்டாக்குகின்றன. இச்செயலைத் தூண்டல்-புலன் உணர்வு -செயல் என்று முற்ைப்படுத்தலாம்; இவை ஒன்றன்பின் ஒன்றாக மிகவேகமாக நிகழ்கின்றன. குறியீட்டு நிலையில் நடைபெறும் நடத்தை மேற்கண்ட நடத்தையின்மீது வைக்கப்பெற்றுள்ளதாகக் கருதலாம். இக் நிலையில் நடத்தை செயற்படுங்கால் இயங்குவாய்களின் செயல் தடைசெய்யப்பெறுகின்றது. உண்மையிலேயே காம் சிந்திப்பதற்காகச் செயற்படுவதை நிறுத்துகின்றோம். கீழ் நிலையில் நடைபெறும் பொருத்தப்பாட்டு வகைகளையெல்லாம் சிந்தனை நிலையில் குறியீட்டு வடிவில் இருமடியாக்கு" கின்றோம். கீழ்நிலையில் தேவைப்படும் வழக்கமான தசை முயற்சியைச் செலுத்தாமலோ, அன்றி விபத்துநேரிடும் விளைவுக ளிென்றியோ, இங்கிலையில் எல்லாவித எதிர்வினைகளையும் முயன்றுபார்த்து அவை ஒப்புக்கொள்ளப் பெறுகின்றன; அல்லது புறக்கணிக்கப் பெறுகின்றன. ஒரு சிகழ்ச்சியில் பொருத்தமாகத் தோன்றும் ஒவ்வொரு தசைச்செயலையும் மேற்கொள்வதாக இருந்தால், நாம் பயனற்ற பல இயக்கங் களைச் செய்தல் நேரிடும்; அதிகமான அளவு பயனற்ற அ குறியீட்டு கிலே படம் ?: புலனுணர்-செயல் நிலையின்மீது வைக்கப்பெற் றுள்ள குறியீட்டுச் செயலை விளக்குவது. ,瑟姆。 இரு witurág-Duplicate,