பக்கம்:பாட்டுத் திறன்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் #39 சொற்பொருளாகவும், ஒலிநயமாகவும் வடிவம் கொண்டுள்ளன. இவற்றைப் பற்றுக்கோடுகளாகக்கொண்டு படிப்பவர் கவிஞனின் அநுபவத்தைத் திரும்பப் பெறவேண்டும். இவை மூன்றும் ஓர் உள்ளத்திலிருந்து பிறிதோர் உள்ளத்திற்கு உணர்ச்சியை மாற்றித் தருவதற்குத் துணையாக கிற்கும் சாதனங்கள். ஒருவர் இவற்றைப் பயன்படுத்திக் கவிஞனின் அநுபவத்தைப் பெற முயலும்போது அவற்றைப் பயன்படுத்துவதுபோன்ற எண்ணம் எழாமல் கவிதையைப் படித்து அவருடைய உணர்ச்சி யைப் பெறுதல் வேண்டும். - 'வான்கலந்த மாணிக்க வாசகன்ெ வாசகத்தை கான்கலந்து பாடுங்கால்' என்ற இராமலிங்க அடிகளின் வாக்கு இதற்கு ஒரு வழிகாடடி யாக அமையும். உள்ளம் கலந்து பாடினால் கவிஞனின் இதயம் படிப்போரின் இதயத்தைத் தொட்டுவிடும். சங்கப் பாடல்களிலுள்ளனபோல் சொற்களும் சொற்பொருளும் புதியன வாக இருந்தால் தொடக்கத்தில் சிறிது தயக்கமும் தடுமாற்றமும் நேரிடலாம். அவற்றை அறிந்து இரண்டாம் முறையில் கவிதையைப் படிக்கும்பொழுது கவிஞனின் உணர்ச்சியுடன் ஒன்றிவிடமுடியும் நிலையும் ஏற்படும். கவிதையின் ஒலிநயம் உணர்ச்சியால் அமைந்தது; உணர்ச்சியை ஒழுங்குபடுத்த விளங்குவது. அக் கயம் கவிஞரின் உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்ச்சியிலிருந்து தோன்றியது; படிப்போர் உள்ளத்தில் சுரக்கும் உணர்ச்சியை ஒழுங்கு படுத்தக் கருவியாக இருப்பது. ஆகவே, ஒரு கவிதையைப் படிக்குங்கால் உணர்ச்சி ஒழுங்குபட்டவுடன் ஒலிநயம் படிப்ப வர்க்கு இயல்பாகிவிடுதல் வேண்டும். ஒலிநயமும் உணர்ச்சியும் தாளமும் இசையும் போன்றவை. ஒலிநயத்தைச் செவிய்ே உணரக்கூடுமாதலால், கவிதையை வாய்விட்டு இசையூட்டிப் பாட வேண்டும் என்றாகின்றது.கவிதை"செவிநுகர் கனி' என்று போற்றப்பெற்றிருப்பதை எண்ணி உணர்க. ஆகவே, கவிதையின் ஒலி நயத்தைச் செவி உணருமாறு பாடுதல் வேண்டும். 42. ஆளுடைய அடிகள் அருள்மாலை செய்-? . பா.-9