பக்கம்:பாட்டுத் திறன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 131 என்பதை ஐ, ஏ. ரிச்சர்ட்ஸ் என்பார் ஒரு புரியாக்குறியீட்டுப்" படத்தால் விளக்குவர். படத்தின் இயற்கைக் குறைபாடுகளைத் (fimitations) தெளிவாக அறிந்துகொண்டால், இப் படத்தால் ல்ேல விளக்கம் அடையலாம். (எ-டு.) வரைபடத்தின் பகுதி களாகிய இடத்தொடர்புகள்" விளக்கப்பெறுபவற்றின் பகுதி களுக்கிடையேயுள்ள இடத்தொடர்புகளைக் குறிப்பிடத் திட்ட மிடப்பெறவில்லை; அது நரம்புமண்டலத்தின் படமுமன்று. அங்ங்னமே அது காலத் தொடர்புகளைக்" காட்டுவதற்காகவும் குறிக்கவில்லை. வரைபடங்களாக வரையப்பெறினும் அல்லது கற்பனையில் கொள்ளப்பெறினும் இட உருவகங்கள் கவன மற்றிருப்பவர்கட்கு தொல்லைகளையே விளைவிக்கும். வெற்று நிலைப் பொருள்களைப் பற்றிய வரைபடங்கள் செய்திகளின் கிலைமைகளை ஒரே சமயத்தில் சுருக்கமாகக் காட்டக்கூடியவை இங்ங்னம் காட்டப்பெறாதவை தெளிவற்றும் குழப்பமான கிலையிலுமே இருக்கும். எனவே, அஃது ஒரளவு தவறான எண்ணத்தைத் தரக்கூடியதாயினும் அதனை மேற்கொள்வோம். ஒரு கவிதையைப் படிக்கும்பொழுது நடைபெறும் நிகழ்ச்சி களைப் படம் (படம் 8) விளக்குகின்றது. இலக்கிய அநுபவங் கள் இதைவிட எளிதாகவும் இருத்தல் கூடும். கம் கண்கள் தொடர்ச்சியாக அச்சிட்ட சொற்களைப் படிக் கின்றன. இதன் விளைவாக ஆற்றெழுக்கு போன்ற எதிர்வினை ஏற்பட்டு சிலைகள் ஆறுவிதமாகப் பிரிந்து செல்கின்றன என்பர் ரிச்சர்ட்ஸ். எனவே, அவர் கவிதை அநுபவமாகும் முறையில் ஆறு கிலைகள் உள்ளன என்று காட்டுவர். குழைக்கின்ற கவரியின்றி' (கம்பரா.அயோ-நகர்ங்ேகுசெய்.2)என்ற பாடல் படிப்பவரின் அதுடிவமாக மாறும் நிலை யைக் காட்டுகின்றது. பாடலின் சில சொற்களே படத்தில் காட்ட்ப்பெற்றுள்ளன. 45. புசியாக் குறியீடு-Hieroglyph. இது பழைய எகிப்திய எழுத்து களில் ஒரு வகை. இது சொல் அல்லது ஒலியைக் குறிக்கும் ஒரு பொருளின் படமாக இருக்கும். 46. Q-#Qasi-in-i-Spatial Relations. 47. so so; GAgri-####-Temporal Relations. 48. Richards 1.A . ; Pinciples of Literary criticism p. 117.