பக்கம்:பாட்டுத் திறன்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ié}{} பாட்டுத்திறன் ஒருவகையதுபவத்தையும் பெற்றிருக்கின்றோம். குமரகுருபர அடிகள் பெற்ற அநுபவம் இது : சிங்கமும் வெங் களிறுமுடன் விளையாடும் ஒரு பால்; சினப்புவியும் மடப்பிணையும் திளைத்திடும் அங் கொருபால்; வெங்கரடி மரையினொடும் விளையாடும் ஒருபால்; விட அரவும் மடமயிலும் விருந்தயரும் ஒருபால்." (பினை-பெண் மான்; மரை-ஒருவகை விலங்கு) இருப்பதைவிட இருக்கவேண்டியதைக் கூறுகின்றார் கவிஞர். கற்பனையில் அவர்காணும் காட்சியை நாம் காணும்பொழுது நாம் எல்லையற்ற இன்பத்தில் ஈடுபடுகின்றோம். குற்றாலத்தில் தங்கும் பொழுதெல்லாம் தேனருவியைப் பார்க்கின்றோம்; அதன் திரைகள் வானின் வழி ஒழுகுகின்ற வண்ணக் காட்சியையும் காண்கின்றோம். சில சமயம், அந்த அருவி இன்னும் உயரத்திலிருந்து விழுந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்' என்றும் கினைக்கின்றோம். கம்மைப் போலவே அவாக்கொண்ட கவிஞர் தன்னுடைய கவிதைப் படைப்பில் அந்த அவாவைத் தீர்த்துக்கொள்கின்றார். தனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும் செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்.” இந்தக் கவிதையைப் படிக்கும் கம்முடைய அவாவும் ஓரளவு கிறைவேறிவிடுகின்றது. இங்கனம் கவிஞர்களின் ஆழ்ந்தகன்ற புலன்காட்சிகள் நம்முடைய புலன்காட்சிகளையும் விரிவடையச் செய்கின்றன; கவிஞர்கள் பெற்ற அநுபவத்தையே நாமும் ஓரளவு பெறுகின்றோம்; அவர்களிடம் உண்டான மகிழ்ச்சியே நம்மிடமும் ஏற்படுகின்றது. அவர்கள் மனசிலையே கம்மிடமும் உண்டாகின்றது. 13. மீனாட்சியம்மை குறம்-1ே 18. திருக்குற்றாலக் குறவஞ்சி-44 (கண்ணி-8.)