பக்கம்:பாட்டுத் திறன்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 芷 முருகுணர்ச்சியை கல்குவது : கவிதை முருகுணர்ச்சியைத் தருகின்றது.எங்கெல்லாம் அழகு இருக்கின்றதோ அங்கெல்லாம் கவிதை தோன்றும். இக்கீரர் தாம் உணர்ந்த அழகைப் பொது முறையில் திருமுருகாற்றுப்படையாகப் பாடி மகிழ்ந்தார். அதில் அவர் அழகின் இயல்பைக் கைபுனைந்தியற்றாக் கவின் பெறுவனப்பு' என்று சுட்டியுரைத்துள்ளார். மலையும் யாறும் காடும் கடலும் கதிரவனும் திங்களும் விண்மீன்களும் இயல் பாகவே அரும்பியவை; இவற்றில் காணப்பெறும் அழகே கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு. இத்தகைய வனப் பையே பெருங் கவிஞர்கள் தம் கவிதைகளில் அமைத்துக் கொள்ளுகின்றனர்; செம்பொன்னை யுருக்கி வார்த்தாலெனக் காட்சியளிக்கும் அக்திவான் செக்கரழகும், கொண்டல் கொண்ட லாக ஓடும் புயலின் அழகும், அது பொழியும் மழையின் அழகும்,அத்தண்புனல் மணற்கற்களை அரித்தோடும் அருவியின் அழகும், பச்சைப்பசேலெனப் பெருங்காட்சியளிக்கும் பொழில் களின் அழகும், அவைகளில் பச்சைப்பாம்பெனப் பின்னிக் கிடக்கும் பசுங்கொடிகளின் அழகும், அவைகளினின்றும் அரும்பியுள்ள நகைமலரின் அழகும்" அவர்கள் கவிதைகளில் இடம்பெற்று அவற்றைப் படிப்போரின் இன்ப ஊற்றைத் திறக்கும் கதவுகளாக அமைந்து விடுகின்றன. இந்த வனப்பி லிருந்தே முருகன்' என்ற கடவுட்டன்மையும் தோன்றியது; தமிழன் அதற்கும் ஒரு வடிவம் கொடுத்து முருகன் எனப் போற்றினான். முருகனும் தமிழ்க் கடவுளாயினான். மேற்புலக் கவிஞர் ஒருவர் அழகே உண்மை; உண்மையே அழகு' என்றுகூறிப் போக்தார். தன்னால் அழகுடையதெனத் கருதப்பெறும் ஒன்றை ஒருமையுள்ளங்கொண்டு வழிபட்டால் அவன் அழகையாண்டும் காண்பான். இயற்கை ಎಗಟಿ ಖಗ್ಗಹ இறை வனையே காணுதல் வேண்டும் என்ற எண்ண்மும் அவன் சிந்தையில் எழத் தொடங்கும். அவ்வெண்ணம் முதிர்ந்து முதிர்ந்து புலன்களை இயற்கை வழிச்செலுத்தினால், உண்மை இயற்கையின் அழகில் தோய்ந்து சிற்கும். நாளடைவில் அவ்வழகு, புலன்கட்கும் உள்ளத்திற்கும் விருந்தாகி அகப்புற வேற்றுமைகளைக் களைந்து ஆண்டவனையே காண வழி 14. திரு. வி.க. முருகன் அல்லது அழகு, பக்கம் 18 பா.--11