பக்கம்:பாட்டுத் திறன்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 181 அறியாதவரையும் அறியச் செய்யும் கோக்கத்தோடு திங்கள் வானத்தில் பலரும் காணத் திரிவதாகக் கருதுகின்றார். இவ்வுணர்ச்சி, மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கட் புத்தேள் திரி தரும்' என்று வடிவெடுத்தது. உண்மையில் திங்கள் வானத்தில் திரியவும் இல்லை, உலகத்தார்க்கு இவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்ற நோக்கமும் அது கொள்ளவில்லை. இந்த உண்மை திங்கட்குத் தெரியவும் தெரியாது. ஆயினும், வானத்தில் விளங்கும் திங்களுக்கு இதனைக் கற்பித்துக் கூறினார் புலவர். இவ்வாறு அமையும் கற்பனைதான் கருத்து விளக்கக் கற்பனை என்பது. மற்றோர் எடுத்துக்காட்டு : காஞ்சிமாநகரில் சைவ மட்ங் களில் உள்ள துறவியர் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு ஒருங்கிய உள்ளத்தினராய்ச் சிவ வழிபாடு செய்வதைச் சிவஞான அடிகள் என்ற கவிஞர் காண்கின்றார். துறவியர்கள் அடியிற் கண்டவாறு எண்ணுவதாக அடிகள் கருதுகின்றார் : காஞ்சி யில் எழுந்தருளியுள்ள திருவேகம்பப் பேருமான் காமத்தை விளைவிக்கும் மன்மதனை அழித்தார், சிறந்த யோகியர்போல் நீண்ட சடை முடியை யணிந்து கொண்டுள்ளார். அழகிய காவி உடையையும் அணிந்து கொண்டுள்ளார். காம் எல்லாம் அவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துறவி எனக்கொண்டு போற்றி வணங்கி வருகின்றோம். அவரும் அதனை ஏற்று அங்ஙனமே இருந்து வருகின்றார். இருப்பினும் துறவு கிலைக்குப் பெருங் குற்றத்தை விளைவிக்கும் கூடாலொழுக்கமாகிய இணை விழைச்சை உடையவராயுள்ளார்; உமையம்மையார் தம்மைப் புல்லியதால் உண்டாகிய கொங்கைத் தழும்பையும் பூண்டுள் வார். இது கமது துறவு நிலைக்கே ஒரு பெரிய குறையை உண்டாக்குகின்றது. தவிரவும், கமக்கும் இஃது ஒரு பெரிய இழிவாகின்றது. இத்தகையவரைச் சிறையிடுதலே தகும், கம்பிக்கைக் குற்றம் செய்தவருக்கு இதுதான் சரியான தண்டனை' என்று முடிவு கட்டுகின்றனர். அங்ங்னமே, தமது