பக்கம்:பாட்டுத் திறன்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 பாட்டுத் திறன் மனக் குகையில் சிறையிடுகின்றனர். துறவியர் ஒருங்கிய உள்ளத்தால் ஓர்ந்திருக்கும் காட்சி சிவஞான முனிவருக்கு மேற் குறிப்பிட்ட உணர்ச்சியை உண்டாக்குகின்றது; அவ்வுணர்ச்சி, காமனை முனிந்து கெடுஞ்சடை தரித்துக் கவின்றகல் லாடைமேற் புனைந்து யாமெலாம் வழுத்தும் துறவியென் றிருந்தும் ஒருத்திதன் இளமுலைச் சுவடு தோமுறக் கொண்டார் எனச்சிறை யிடல்போல் சுடர்மனக் குகையுள் ஏ கம்பத்து " ஓம் மொழிப் பொருளை அடக்கி ஆனந்தம் உறுகர்வாழ் இடம்பல உளவால்' என்ற பாடலாக வடிவம் பெற்றிருக்கின்றது.

  • دسمه-.... மேலும் சில கற்பனைகள் : கம்பராமாயணத்தில் உள்ள ஒரு சில கற்பனைகளைக் காண்போம். இவ்வண்டத்திலும் இவ்வண்டத் திற்கு அப்பாற்பட்ட இடங்களிலும் உள்ள அரக்கர்கள், அவுணர்கள் முதலிய அனைவரும் இலங்கையில் மூலபலமாகத்' திரளுகின்றனர். இக்காட்சி இவ்வண்டங்கள் அனைத்திலுமுள்ள கருக்கிளர்மேகம் எல்லாம் ஒருங்குடன் கலந்த காட்சியை யொத்துள்ளது. இவ்வுலகில் பல்வேறு துறைகளில் காணப் பெறும் பாவங்கள் யாவும் பல்வேறு உருக்கொண்டு திரண்டு வந்திருப்பதைப்போல் அவ்வரக்கர்கள் பல்வேறு உருவங்களுடன் காணப்பெறுகின்றனர். இவர்களைக் கம்பன்.

அறத்தைத் தின்று அருங் கருணையைப் பருகிவேறு அமைந்த மறத்தைப் பூண்டுவெம் பாவத்தை மணம்புணர் மணாளர்: என்று வருணிக்கின்றான். மூலபலச் சேனையின் தன்மையைக் கூறும் கட்டத்தில் பல கற்பனைக் கொடுமுடிகளைக் காணலாம். சிலவற்றை நம்முடைய மனத்திரையில் அமைப்பதுகூடச் சிரமம். இவர்கள் உணவு உண்பதற்கும் ர்ேபருகுவதற்கும் முறை தவறி விட்டால் என்ன செய்வர் என்பதைக் கவிஞன், - 17. காஞ்சிபுரா-திருத கர-109. 18. புத்த-மூலபல வதை-8,