பக்கம்:பாட்டுத் திறன்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 18? கையாளும் முறைக்கும், சாதாரணக் கவிஞர்கள் சொற்களைக் கையாளும் முறைக்கும் கிறைந்த வேறுபாடு உண்டு. அவர்க ளியற்றிய கவிதைகளைப் படிக்கும்பொழுதே இவ்வேறுபாடு புலனாகும். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் கவிதை இயற்றும் திறனைக் குறித்து, "எனைவைத்தி எனைவைத்தி யெனப்பதங்கள் இடையிடைநின் றிரந்து வேண்ட இனிவைப்பாம் இனிவைப்பாம் பொறுத்திடுமின் பொறுத்திடுமின் என்றுகூறி கினைவுற்ற ஒருகடிகைக் களவில்கவித் தொடைதொடுத்து கிமலர் பூணப் புனைவுற்ற மீனாட்சி சுந்தரவள் ளலைப் போல்வார் புவியில் யாரே' என்று இராமசாமி அய்யர் என்ற பிள்ளையவர்களின் கண்பர் பாடியுள்ளது ஈண்டு சிந்திக்கற்பாலது. பல்வேறு கவிதை களைப் படித்துச் சுவைப்பவர்களே கவிஞர்களின் சொல் வளத்தை கன்கு அறிதல் இயலும். மேற்கூறியவற்றிலிருக்து சொல்வளம் எனக் குறிப்பிட்ட வுடன் கண்டுகள் அல்லது அகராதியிலுள்ள சொற்களையெல் லாம் மனப்பாடம் செய்துகொண்டு அவற்றைக் கவிஞன் தன் கவிதைகளில் ஆளுதல் என்று கருதுதல் தவறு. இடத்திற் கேற்பச் செய்யுளின் நடைக்கேற்பச், சொற்கள் யாதொரு தட்டுத் தடையுமின்றி விரைந்துவந்து உதவும் நிலையையே சொல்வளம் என்று குறிப்பிட்டோம். இலக்கிய வழக்கிலும் உலகவழக்கிலும் உள்ள எல்லாச் சொற்களுக்கும் உயிர் உண்டு; வாழ்க்கை உண்டு; வாழ்க்கை வரலாறும் உண்டு. பண்டைய இலக்கியங்களில் கிரம்பப் பயிற்சியும் தன் காலத்து வழங்கும் மொழிபற்றிய மிக ஆழ்ந்த அநுபவமும், தன் ஆன்மாவுடன் ஒன்றிக் கலந்துவிட்ட தமிழுணர்ச்சியும் இருக்கும் கவிஞனுக்குத் தான் சொற்களின் உயிர்த் தத்துவம் நன்கு புலப்படும். இத் தகைய கவிஞனிடம்தான் அவன் நினைத்தவுடன் வேண்டும் பொழுது சொற்கள் அவனது மனக்கண்முன் தோன்றித் 3. சாமி நாதய்யர், உ. வே. மீனாட்சி சுத்தரம் பிள்ளையவர்கள் சசித்திரம். (இரண்டாம் பாகம்) பக்-285 4. G*rà amú, Diction.