பக்கம்:பாட்டுத் திறன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாட்டுத் திறன் எந்த மொழியும் குறியீடுகளாலானது. சொற்களே இக்குறி யீடுகள். அச் சொற்களுக்குப் பொருள் உண்டு. ஆகையால இவை தாண்டலை எழுப்பும் அடையாளங்க ளாகின்றன. கம்முடைய கண்கள் அச்சிட்ட கவிதையின் சொற்களைப் பார்க்கின்றன; கவிதையை வாய்க்குள்ளும் படிக்கின்றோம்; வாய் விட்டும் படிக்கின்றோம். கண்ணின் மூலமும், காதின் மூலமும் ஏற்படும் தூண்டல்கள் நம் மூளையை அடைகின்றன. காம் கவிதையின் பொருள்களை அறிகின்றோம். கம் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் எழுகின்றன. இவை தம்மோடு தாமாகக் கலந்து தொகுதிகளாகிப் பிற எண்ணங்களுக்குக் குறியீடுகளாக அமைகின்றன. இவையாவும் பெருமூளையின் புறணியில் கடை பெறுபவை. கம் மூளையிலுள்ள ஒரு பகுதியாகிய மேற்பூத் தண்டு உள்ளக் கிளர்ச்சி நிலையில் பங்கு கொள்கின்றது என்பதை ஆய்வுகளால் கண்டறிந்துள்ளனர். உள்ளக்கிளர்ச்சி பற்றிப் பல கொள்கைகளும்எழுந்துள்ளன. இவற்றையெல்லாம் ஒருங்கு வைத்து எண்ணினால் ஓர் உண்மை புலனாகின்றது. கவிதையைப் படித்து அதிலுள்ள செய்திகளைப் பெருமூளை அறிந்ததும், அங்குத்தோன்றும் எண்ணங்களும் எண்ணக் கோவைகளும் மேற்பூத்தண்டைத் தாண்டி அதன் மூலம் தன்னாட்சி நரம்பு மண்டலத்தை இயக்குகின்றன. இம் மண்டலத்தின் இயக்கத்தால் சுரப்பிகள் தாண்டப்பெற்று அவற்றின் சாறுகள், குறிப்பாக மாங்காய்ச் சுரப்பிகளின் சாறு கள், குருதியோட்டத்தில் கலந்து உடலெங்கும் உணர்ச்சி அலைகளை எழுப்புகின்றன. வாழ்க்கை யநுபவத்தில் இவ் வுணர்ச்சிகள் ஏற்படுங்கால் இத்தகைய உடல் மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பது உளவியல் காட்டும் உண்மை. வெகுளிச் சுவை, அவலச் சுவை, மருட்கைச் சுவை போன்ற சுவைகள் உள்ள கவிதைகளைப் படிக்கும்பொழுது அவற்றால் பெறும் செய்திகள் பெரு மூளையில் பல்வேறு எண்ணக் கோவைகளை எழுப்பி மேற்குறிப்பிட்ட நிலைமைகளை உண்டாக்குகின்றன என்று ஊகம் செய்யலாம். இதனால்தான் கவிதையிலுள்ள கவிஞனின் உணர்ச்சிகள் நம்மிடமும் எழுகின்றன. உண்மை யான கவிதையநுபவமும் நம்மிடம் உண்டாகின்றது. இத்தகைய முடிவுக்குக் கொண்டு செலுத்தக்கூடிய பல்வேறு கருத்துகளை நூலின் முதற் பகுதி ஆராய்கின்றது. உடலியல், உளவியல், {}, . eño-Symbol, 10. அடையாளம்-Sign,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/20&oldid=812455" இலிருந்து மீள்விக்கப்பட்டது