பக்கம்:பாட்டுத் திறன்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பாட்டுத் திறன் என்ற பாடலில் கும்பகருணனது வெறுப்புணர்ச்சி புலப்படு வதைக் காணலாம்; அதற்கேற்றவாறு சொற்களும் அமைக் திருக்கின்றன. பாடலின் ஒசையும் சொற்களின் ஒலிநயமும் சிறிதேனும் தவறியதாயின் கும்பகருணனது கோக்கமே தோன் றாது ஒழிந்து விடும். இங்ங்னமே வாலி இராமனைப் பழித்துக் «5 մլն, வீரம் அன்று விதியன்று மெய்ம்மையின் வாரம் அன்று கின் மண்ணினுக் கென்னுடல் பாரம் அன்று பகையன்று பண்பொழிந்து ஈரம் அன்று.இது என்செய்த வாறு?ே" என்ற பாடலிலும் சொற்கள் இயற்கையோசையோடும் வேகத் தோடும் வருவதைக் காணலாம். இங்ங்ணம் பலப்பல எடுத்துக் காட்டுகளைக் காட்டிக் கொண்டே போகலாம். சொற்களின் ஒலியால் பெறும் பொருள் ஒரு சொல்லில் கற்பனை யாற்றல் காணப்பெறினும், அல்லது அஃது ஒரு விகழ்ச்சி அல்லது படத்தை அப்படியே நினைவிற்குக் கொண்டு வரினும் அச்சொல் தோன்றும் இடத்தில் கவிதை காணப்பெறும். இத்தகைய சொல் தன்னுடைய ஓசைத்தன்மை, பொருள் விரிக் கும் தன்மை ஆகிய இரண்டால் தன் செயலை ஆற்றுகின்றது. ஒரு சொல்லுக்குள்ள இவ்விரண்டு தன்மைகளும் கவிதையில் தான் தெளிவாக விளங்கும். இந்த இரண்டு தன்மைகளை மொழியியலார் முறையே ஒசைய்ாற்றல்' என்றும் பொரு ளாற்றல்' என்றும் கூறுவர். ஒசையளவிலும் சொல் பெரிய செயலைப் புரிகின்றது. கவிதை எந்த உணர்ச்சிக்கு நிலைக் களனாக உள்ளதோ அஃது அந்த உணர்ச்சிக் கேற்றவாறு அமைந்திருக்கும். கவிதையும் அதன் பொருளும் விளங்காவிடினும் அது தக்க ஒசையுடன் படிக்கப்பெற்றால், அஃது இன்ன உணர்ச்சியைக் கொண்டு எழுந்தது என்று கூறிவிடவும் முடியும், இவ்வுண்மையைப் பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர் என்பதைப் பாவுக்குப் பேராசிரியர் கூறியுள்ள பொருளால்’ நன்கு அறியலாம், - 11. வான்வதை-84. 18. ஒசையாற்றல் Phonetic power. 19. Gu Gert Hood - Semantic power. 20. இந்நூல் இயல் -11