பக்கம்:பாட்டுத் திறன்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பாட்டுத் திறன் என்று வருணிக்கின்றான்; கவிதையும் பிறந்து விடுகின்றது. இன்னோர் எடுத்துக்காட்டு : இருந்தகுலக் குமரத்தமை யிருகண்ணும் முகத்தழகு பருக நோக்கி, அருங் தவனை யடிவணங்கி யாரையிவ ருரைத்திடுமின் அடிகள் என்ன,' என்ற பாடற் பகுதியில் சனகனுடைய மாப்பிள்ளை வேட்கை' புலப்படுகின்றது. நீண்ட நாட்களாகத் தன் அருமைப் புதல் விக்குத் தக்க கணவன் கிடைக்காமல் அவதிப்பட்டவனல்லவா? வேள்விச் சாலையில் விசுவாமித்திரன் அருகில்அமர்ந்திருந்துடன் வந்த இராம இலக்குமணர்களின் பொலிவும் அழகும் அவன் உள்ளத்தைக் கவர்ந்து விடுகின்றன. அவர்கள் முகத்தமுகைப் 'பருக நோக்குகின்றான். மேற்கூறியவாறெல்லாம் கவிஞர்கள் ஏற்ற சொற்களை ஏற்ற இடத்திலும், உணர்ச்சிகளுக்குத் தக்க சொற்களைத் தேர்ந்தெடுத்தும் கவிதையில் கையாளுவதால்கவிதைகள்பொருட் சிறப்புடன் பொலிவு பெறுகின்றன. இங்ங்னம் கையாளும் முறையே கவிதையின் சொல்வளம், அல்லது சொல்லாட்சி என்பது. சில இடங்களில் சொல்லாட்சியில் அழகு விளங்கும்; சில இடங்களில் உணர்ச்சி துள்ளும். இயல்பாக அமையும் சொல் வளமே கவிதையைப் பல்லாற்றானும் உயர்வடையச் செய் கின்றது. - 34. பாலகாண்-மிதிலைக்-157,