பக்கம்:பாட்டுத் திறன்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பாட்டுத் திறன் ஒரு குழந்தையைத் துரங்கவைப்பதற்குத் தாய் மேற்கொள் ளும் முயற்சிகள் ஈண்டுச் சிந்திக்கற்பாலவை. அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே! மூடத் தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

  • Tவேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்

தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி! வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும் கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!' என்ற தாலாட்டுப் பாடலைப் பாடித் தொட்டிலை ஆட்டுவாள்; அலலது குழந்தையைப் பக்கத்தில் கிடத்திக்கொண்டு அதன் முதுகை மெதுவாகத் தட்டுவாள். பாட்டின் ஒலி நயத்தைக் குழந்தை உணரத் தொடங்கியவுடன், அல்லது தொட்டிலின் ஒழுங்கான அசைவை அறிந்தவுடன், அல்லது அன்னையின் கை தன் முதுகை மெல்லத் தட்டும் ஒழுங்கை அறிந்தவுடன் குழந்தை யின் மனம் உறக்கத்தில் ஈடுபடத் தொடங்குகின்றது; சிறிது நேரத்தில் கண்வளர்கின்றது. அங்ங்னமே பாட்டின் ஒலிநயமும் நம்மை கனவுலகத்தை விட்டுக் கற்பனையுலகத்திற்குக் கொண்டு செலுத்தும் சாதனமாக அமைகின்றது. உறக்கத்திற்குரிய சாதனங்களைப் பெற்றுப்பழகிய குழந்தை 药sö”@显一 வில் உறக்கம் வரும்பொழுதெல்லாம் அவற்றை நாடும்; அங்ங்னமே, பாட்டைப் படிக்கும் நம் உள்ளமும் அறிவுலகத்தி லிருந்து உணர்வுலகத்தை எட்டுவதற்கு அதற்கு ஏற்றதாகிய ஒலிநயத்தை நாடும் என்பதை நம் அநுபவத்தால் அறிகின்றோம். பசனைக்குழுவினர் காமா வளி பாடியும் தாளத் தைப் போட்டும் ஓர் உச்சநிலையை அடைந்து கோவிந்த காம சங்கீர்த்தனம்' முடிந்ததும், யாராவது ஒருவர் ஒரு விருத்தத்தை இராகமாலிகையில் பாடுங்கால் அனைவர் உள்ளமும் அதில் ஒன்றி ஈடுபடுவதை நாம் காணலாம். ஒலிநயத்தின் சிறப்பு : அச்சு வடிவத்தில் காணும் பாட்டு அரையுயிரோடு தான் உள்ளது. அதைப் பாடிய கவிஞர் இப் பொழுது கம்மிடையே இலர். அவர் தம் பாட்டில் தம்முடைய முகக் குறிப்பையும், கையசைவுகளையும், இசையையும் விட்டுச் சென்றிலர்; அங்ங்னம் விட்டுச் செல்லவும் இயலாது. 21. பாரதிதாசன் : பெண்குழந்தைத் தாலாட்டு.