பக்கம்:பாட்டுத் திறன்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பாட்டுத் திறன் விசும்பின்கண் அலை அலையாய் எழும்பி ஓர் ஒழுங்காக வரும் ஓசையே பாவாகின்றது என்பது பெறப்படுகின்றது. இதனை நன்கு உணர்ந்த பழந்தமிழர் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு பாக்களின் ஒசைக்கு முறையே செப்ப லோசை, அகவலோசை, துரங்கலோசை, துள்ளலோசை எனத் தனித்தனியே பெயர் தந்து சிறப்பித்தனர். மேலும், இவை ஒவ்வொன்றையும் பாக்களின் வகைகளுக்கேற்ப மும்மூன்றாகப் பிரித்துணர்ந்து நுட்பமும் கண்டுள்ளனர்.இந்த ஒசை நயத்தைத் தான் தொல்காப்பியர் வண்ணம் என்ற பெயரால் குறிப்பிடுவர். வண்ணம் என்பது ஒரு பாவின் கண்ணே கிகழும் ஒசை விகற்பம்; அஃதாவது சந்த வேறுபாடு. தொல்காப்பியர் செய்யுளியலில்’ பாவண்ணம், தாவண்ணம், வல்லிசைவண்ணம், மெல்லிசை வண்ணம் என்பன போன்று இருபது வகையாகப் பாகுபாடு செய்து பேசுவர். அவிநயனார் தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசைவண்ணம், பிரிந்திசைவண்ணம், மயங்கிசை வண்ணம் என ஐந்து வகைப்படுத்தி, ஒவ்வொன்றிலும் இருபது உட்பிரிவு கொண்டு வண்ணம் நூறு எனக் கூறுவர். இதன் விரிவுகளை யாப்பருங்கல விருத்தியினுட் காணலாம். ஒலிநயம்-விளக்கம்: மேலே ஒலிநயம், வண்ணம், சந்த வேறுபாடு என்றெல்லாம் குறிப்பிட்டோமன்றோ? அவற்றைச் சிறிது விளக்குவோம். பாட்டை உரக்கப் படிக்கும்பொழுது, பாட்டிலுள்ள ஒலிகள் இயங்குகின்றன. அந்த இயக்கத்தில் ஏற்படும் ஒழுங்கே ஒலிநயம் எனப்படுவது; வண்ணம் என்பதும் சந்தம் என்பதுவும் அதுதான். இழுமென் மொழியால் விழுமி யது நுவலல்' என்று தொல்காப்பியர் கூறுவதும் இதுவே என்க. "இழும்' என்பது ஒசையளவில் கின்று பொருளுணர்த்தும் ஒர் ஒலிக்குறிப்புச் சொல்" போலாகும். இவ்வழகிய ஒலிக் குறிப்பு கவிதைக்கு இன்றியமையாது வேண்டப்பெறும் ஓர் உறுப்பாகும். ஒலிகளுக்கு மூன்று தன்மைகள் உண்டு: ஒன்று, ஒலியின் கால அளவு; அதனால் அமையும் நீட்டல் குறுக்கல் வேறுபாடு. இரண்டு, ஒலியின் தன்மை, வன்மையாகவும் மென்மையாகவும் ஒலிக்கும் வேறுபாடு. மூன்று, ஒலிக்கும் முறை: எடுத்தும் படுத்தும் கலித்தும் ஒலிக்கும்பொழுது உண் 27. செய்யுளி-நூற்.205, 28. தொல்-செய்யுளியல் துரத் 238.

    • ****śāhā assie-Onomatopoeic word.