பக்கம்:பாட்டுத் திறன்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 288 தின்னப் பழங்கொண்டு தருவான்-பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்பன் என்னையன் என்றால்-அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்." அத்தின புரமுண்டாம்-இவ் வவளியிலேயதற் கிணையிலையாம் பத்தியில் விதிகளாம்-வெள்ளைப் பனிவரை போற்பல மாளிகையாம் முத்தொளிர் மாடங்களாம்-எங்கும் மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம் கத்தியல் வாவிகளாம்-அங்கு - நாடு மிரதிநிகர் தேவிகளாம்." இவையிரண்டும் வெவ்வேறு சீர்களில் வெவ்வேறோசையால் வந்த வியனிலைச் சிந்து வகைகள். ஆனந்தக் களிப்பு, தெம்பாங்கு ஆகியவையும் இச்சிந்து வகைகளாம். மேற்கூறிய பாட்டின் அமைப்பு முறையைக் கவிஞர்கள் கன் முறையில் பயன்படுத்திக் கவிதைக் கலையை வளர்த்துள்ளனர். தமக்கு முன் மக்களின் பொழுது போக்கான விளையாட்டுக் களுக்கு உரியவைகளாக இருந்த அம்மானை, ஊசல், சாழல் முதலிய பாட்டு வகைகளை மாணிக்கவாசகர் அவற்றில் உயர்ந்த கருத்துக்களை அமைத்துப் பாடியதால் அவை.இன்றும் வாழ் கின்றன. இங்ங்னமே, கலிப்பா முதலிய பாடல்களும் வேறெ தற்கோ பயன்பட்டிருந்திருக்கலாம்; அவற்றை நுட்பமான அகப் பொருட் பாடல்களுக்கும் பிறகருத்துக்கட்கும் கவிஞர்கள் பயன் படுத்திக் கொண்டனர். இன்று மனம் போன போக்காகப் பாடப் பெறும் சினிமாப் பாட்டுகள் அழிந்துபடினும் அவற்றுள் காணப் பெறும் ஒலிநய அமைப்பு முறை மட்டும் பிற்காலத்தில் கவிதைக் கலைக்குப் பயன்படும் என்று கருதலாம். உணர்ச்சிக்கேற்ற யாப்பு: கடலைமா, சருக்கரை, கெய் ஆகிய பொருள்கள் ஒன்று சேர்ந்து இலட்டு, மைசூர்ப் பாகு போன்ற பல்வேறு இனிப்புப் பலகாரங்களாகின்றன. எல்லாம் இனிப்புச் சுவையில் அடங்கினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகச் சுவைக்கும் தன்மையுடையது. ஒவ்வொன்றிலும் அடங்கின. 35. பாரதிய கண்ணள் - விளையாட்டுப்பிள்ளை. 88. பாரதியார் : பாஞ்சாலி சபதம் (7) .