பக்கம்:பாட்டுத் திறன்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகட்டுத்திறன் 343 صحيدة تتبع تصدد) يحيى بوي பொருளின் தன்மையைத் தெளிவாக விளங்கவைப்பதுடன் அதனைச் சிறப்பிக்கவும் செய்யும். தருமத்தின் வதன மென்னப் பொலிந்தது தனிவெண் திங்கள்' என்ற கம்ப காடன் வாக்கில் நிலவுபுறப்படுதலிலும் உவமிக்குங் கால் பொருளை உயர்த்தும் கொள்கை வலியுறுத்தப்பெற்றிருப் பதைக் கண்டு மகிழ்க. மேற்கூறியவாறு ஒரு பொருட்கு அதனினும் உயர்ந்த பொருளை உவமையாகக் கூறினாலும் அவ்வுவமை சிறப்பு, கலன், காதல், வலி என்ற இக்கான்கனுள் ஒன்றை நிலைக்கள மாகக் கொண்டு தோன்றுதல் வேண்டும் என்று குறிப்பிடுவர் அறிஞர். அவற்றுள் சிறப்பு என்பது, உலகத்துள் இயல்பு வகையாலன்றிச் செய்கை வகையாற் பெறுவதாகும். முரசு முழங்குதானை மூவருங் கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை எழாஅல் கோடியர் தலைவ!" என்புழிப் பெருமைமிக்க தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் தம்மில் பகைமை நீங்கி ஒன்று கூடி அரசவையில் வீற்றிருந்த தோற்றம்போல கிருத்தம், கீதம், வாத்தியம் என்னும் மூன்றும் பிரிவின்றி ஒத்து கிகழும் வண்ணம் கூத்தர் தலைவன் தங்கியிருந்த செய்தி கூறப்பெறு. கின்றது. இவ்வுவமை, சிறப்பினை நிலைக்களமாகக் கொண்டு பிறந்தாகும். ஒவத் தன்ன இடனுடை வரைப்பின்' என்பதில் உள்ள உவமை நலன்பற்றி. வந்ததாகும். கலன் என்பது, ஒரு பொருட்கண் இயல்பாய்த் தோன்றிய நன்மை. மேற் காட்டிய இந்த உவமையில் சித்திரம்போலும் வனப் பமைந்த இடத்தினையுடைய நகரம் என அதன் கலம் தோன்ற உவமை கூறப் பெற்றிருப்பதை அறிக. பாவை யன்ன பலராய் மாண்கவின்’ i 器。 யோ. தை லகாட்டு-80. 8. பொருதசாற வ: (54-8?). புறம், 251 8. அகம் 98,