பக்கம்:பாட்டுத் திறன்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத்திறன் அவி 352 -ன் g4? தம்மையும் தமது சுற்றத்தினரையும் வைத்து நன்கு பாதுகாத்த வள்ளம் பெருந்தகையான வெளிமான் இறந்துபட்டமையால், தாமும் தம் சுற்றமும் யாதொரு பற்றுக்கோடுங் காணாது இறந்து படும் கிலையில் அலமரும் அவ்வியல்பினைப் பெருஞ்சித் திரனார் கண்ணில் ஊமன் மாரியிரவில் கடற்பட்ட நிகழ்ச்சி யினை உவமையாக வைத்துப் புலப்படுத்தின திறமையை எண்ணும்தோறும் பெருவியப்பினைத் தருகின்றது. இந்த உவமை தமிழ்மொழி உள்ள அளவும் கிலைத்து கிற்கக் கூடியது. உவமத் தொகை: உவமை நன்கு பயன்படுத்தப்பெற்றபிறகு உவமையில் குறுக்கம் தோன்றத் தொடங்கியது. இக்குறுக்கத் தையே இலக்கண நூலார் உவமத் தொகை என வழங்குகின்ற, னர். போல, புரைய' என்ற உவம உருபுகள் வெளிப்படை யாகக் காணப்படுங்கால் உவமை விரி' என்றும், இவை தொக்கு வரும் பொழுது உவமைத் தொகை என்றும் வழங்கப்பெறுகின் றன; தாமரை அன்னமுகம்' என்ரிது உவமை விரி; தாமர்ை முகம் என்பது உவமைத் தொகை. தொல்காப்பியர் உவம உருபுகள் முப்பத்தாறினைத் தொகைப்படுத்தி அவற்றுள் அடங்காதனவும் உள எனக் குறிப்பிடுவர். மேலும், அவர் அவற்றை வகைப்படுத்தி வினை, பயன் மெய், உரு ஆகிய உவமைகளுக்கு இன்னின்னவை சிறந்தவை என்றும் தெளிவு படுத்தியுள்ளார். x நாளடைவில் இவ்வுவமை உருபுகளின்றி உவமை வழங்கி யது. மழைவண்கை, பொன்மேனி துடியிடை என்பன போன்ற உவமத்தொகைகள் வழக்காற்றில் வந்தன; உவம உருபுகளுடன் சேர்த்துக் கூறியதைவிட உருபின்றிக் கூறுவதற்கு வன்மை அதி கம் உண்டு என்பதை மறத்தலாகாது. பொன்போன்ற மேனி' என்று கூறும்பொழுது மனத்தில் எழும் உணர்ச்சிக்கும், பொன் மேனி' என்று கூறும்பொழுது எழும் உணர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தனர். இவ்வாறு உவமத்தொகையும் உவமவிகியுடன் சேர்ந்து சிலகாலம் வழங்கி வந்தது. உருவகம் நாளடைவில் உவமப் பொருளையும் உவமிக்கப் பெறும் பொருளையும் வேறுவேறாகக் காணாமல் ஒன்றிலேயே மற்றொன்றினைக் கானும் முறை தோன்றியது. தாமரை முகம் என்பதை மாற்றி ‘முகத்தாமரை' என்று கூறத் தொடங் கினர். அங்கனம் கூறுவதால் புதிய அம்கும் தோன்றுகின்றது