பக்கம்:பாட்டுத் திறன்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பாட்டுத் திறன் பொருந்தி உவமை முதலிய அணிகளாக அமைகின்றன. கட்டடங்களுக்கு இயல்பாக அலங்காரங்கள் பொருத்தமாக அமைவதைப்போலவே, சிறந்த கவிதைகளிலும் அணிகள் அமை கின்றன. கட்டடத்தின் அலங்காரப் பகுதிகள் கட்டடத்தை விட்டுத் தனியாகப் பிரிந்து கிற்காமல் கட்டடத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுவதைப் போலவே, பாட்டிலுள்ள அணிகளும் பாட்டின் உணர்ச்சிச் சிறப்பையும், கற்பனைப் பெருமையையும் மறைக்காமல் எடுத்துக் காட்டிப் பாட்டின் பயனுக்கு ஊறு விளைவிக்கா தமைகின்றன. இயல்பாகக் கவிதைகளில் அமையும் அணிகள் அவற்றின் கற்பனை வளத்தைச் சிறக்கச் செய்து கவிதைகளையும் உயர்வுடையனவாக்குகின்றன.