பக்கம்:பாட்டுத் திறன்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடை நயங்கள் தொடைவகை என்பது எழுத்துச்சொற்பொருள்களை எதி ரெதிர் கிறுத்தித் தொடுக்கப்படுவனவாகிய தொடைவிகற்பம். இவை பூத்தொடைபோலச் செய்யுட்குப் பொலிவு செய்வனவாத லின் தொடையெனப் பட்டன. யாப்பு முறையை ஆராயுங்கால் தொடையைப்பற்றிக் குறிப்பிட்டோம். அவை மோனை, இயைபு, முரண், எதுகை, அளபெடை என்று ஐந்து வகைப்படும் என்றும், இவை ஒவ்வொன்றும் அவை வரும் இடங்களை யொட்டி எட்டெட்டு வகையாகப் பாகுபாடு செய்யப்பெறும் என்றும் சுட்டியுரைத்தோம். அவற்றைச் சிறிது விளக்குவோம். மேற்கூறிய ஐந்தும் அடிதோறும் வருங்கால் அவை அடி மோனை, அடி இயைபு, அடி எதுகை, அடி முரண், அடி அளபெடை எனப் பெயர் பெறும், இவை ஒரடியில் முதலிரு சீர்க்கண்ணும் வந்தால் இணை என்றும். முதல்சீர்க் கண்ணும் மூன்றாஞ் சீர்க்கண்ணும் வந்தால் பொழிப்பு என்றும், கடுச்சீர்க் கண்ணின்றி முதற் சீர்க் கண்ணும் இறுதிச் சீர்க் கண்னும் வந்தால் ஒரூஉ என்றும், இறுதிச் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க் கண்ணும் வந்தால் கூழை என்றும், முதலயற் சீர்க் கணின்றி ஒழிந்த மூன்று சீர்க் கண்ணும் வந்தால் மேற்கதுவாய் என்றும், ஈற்றயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சிர்க் கண்ணும் வந்தால் கீழ்க்கதுவாய் என்றும், எல்லாச் சீர்க் கண்னும் வந்தால் முற்று என்றும் பெயர் பெறும். எனவே அடிமோனை கூழைமோனை இணைமோனை மேற்கதுவாய் மோனை பொழிப்புமோனை கீழ்க்கதுவாய் மோனை ஒரூஉமோனை முற்றுமோனை பா-17