பக்கம்:பாட்டுத் திறன்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 263 மேலே குறிப்பிட்ட இன்னகைத் துவர்வாய்' என்ற ஆசிரியப்பா வில்' இன்னகை-நன்மா' என்று முதலிரண்டடிகளில் மட்டி லும் எதுகை வந்திருத்தலைக் காண்க. 'கண்ணின்று கண்ணறச் சொல்லினும்" என்று முதலி ரண்டு சீர்களிலும் எதுகை அமைந்தால் அஃது இணை எதுகை யாகும். பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்' என்று முதற் சீர்க்கண்ணும் மூன்றாஞ் சிாக்கண்ணும் எதுகை அமையின் அது பொழிப்பு எதுகை எனப்படும். பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்' என்று முதற்சீரினும் நான் காம் சீரினும் எதுகை அமையப்பெறின் அஃது ஒரூஉ எதுகை என வழங்கும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்' என்று இறுதிச் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் எதுகை வந்திருப்பதைக் கூழை எதுகை என வழங்குவர். புல்ல வையுள் பொச்சாந்தும் சொல்லற்க கல்லவையுள்' என்று முதலயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் எதுகை வரத் தொடுப்பது மேற்கதுவாய் எதுகை என்றும், முற்றாற்றி முற்றிய வரையும் பற்றாற்றி' என்று ஈற்றயற்சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்னும் எதுகை வரத்தொடுப்பது கீழ்க் கதுவாய் எதுகை என்றும், துப்பார்க்குத் துப்பாயத் துப்பாக்கித் துப்பார்க்குக்' என்று எல்லாச் சீர்க்கண்ணும் எதுகை வரப் பெறின் அது முற்றெதுகை என்றும் வழங்கப்பெறும். பொன்னி னன்ன பொறிசுணங் கேங் திப் பன்னருங் கோங்கி னன்னலங் கவற்றி மின்னவி ரொளிவடங் தாங்கி மன்னிய கன்னிற மென்முலை மின்னிடை வருத்தி என்னையு மிடுக்கண் டுன்னுவித் தின்னடை அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் கன்னியம் புன்னை யின்னிழற் றுன்னிய மயிலேய் சாயலவ் வாணுதல் அயில்வே லுண்கணெம் மறிவுதொலைத் தனவே." 15. இயல் பக்கம் - 227. 18. குறள் . 184. 17. குறள் - 75. 18. குறள் 858. 19. குறள் - 850, 20. குறள் 19. 21. குறள் - 748. 22. குறள் 12. 28. யாப்பருங்கலக்காரிகை 20இன் கீழ் வந்த எடுத்துக்காட்டுச் செய்வுள்.