பக்கம்:பாட்டுத் திறன்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 பாட்டுத் திறன் தன்மையாலும் முயற்சியாலும் வேறுபட்டு ஒழுங்காக அமைந்து வந்த அமைப்பே திரும்பத் திரும்ப வந்து இனிமை பயப்பது ஒலிநயமாகும். இஃது இயற்கையாகவே உணர்ச்சிகளோடு இயைந்து பிறப்பது; தானாகவே வந்தமைவது. ஆனால் எதுகை மோனை முதலியன தாமே வந்தமைதல் அரிது; கவிதைகளை இயற்றுவோர் அவற்றை விரும்பி அமைத்தலே மிகுதி. சி. டி. வின்செஸ்டர் கவிதையில் எதுகை நன்கு அமைதலால் ஒலிநய உறைப்பு அதிகப்படுகின்றது என்று கருதுவர்." அஃது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடியின் முதலிலோ இறுதியிலோ வந்தமையுங்கால் ஒலி நயத்தின் வாய்பாடு தொடங்கும் அல்லது முடியும் இடத்தைச் சுட்டி அறிவிப்பதாகவே இருப்பதால், ஒலிநயம் வற்புறுத்தப்பெறுவதாகக் கருதுவர் ஹட்சன் என்ற திறனாய்வாளர்.' மோனையும் எதுகையும் ஒரு கவிதையின் இருகண் போன்றவை என்றும், அவையே கவிதையின் உயிர் நாடியாகும் என்றும் தமிழறிஞர்கள் கருதுவர். ஒருபாடலில் எதுகை மோனை சிறிது தவறினும், இந்தப் பாட்டு கைனை மொகனை இல்லை. இந்தப் பாட்டு ஏனை மோனை இல்லை’ என்று கல்வியறிவில்லாத பாமர மக்களும் குறைகூறும் அளவுக்கு எதுகையும் மோனையும் சிறப்புடையவையாகத் திகழ்கின்றன. "மோனை முத்தமிழ் மும்மத மும்பொழி யானைமுன்வந் தெதிர்த்தவ னாரடா' என்ற ஒட்டக்கூத்தர் உரையாலும் மோனையும் எதுகையும் கன்கு அமையப்பெறாத கவிதைகளை நம் முன்னோர்கள் கவிதைகளாகவே கருதிற்றலர் என்பது தெளிவாகின்றது. மேற்கூறிய அடிகளில் யானையின் பெருமைக்குக் காரணமான மதத்தினைக் கவிதையின் பெருமைக்குக் காரணமான மோனைத் தொடைக்கு உவமை கூறுதலை அறிந்து தெளிக. மோனையும் எதுகையும் பாடலை எளிதில் மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற கருவிகளாகும். மோனையால் ஓர் அடியும், எதுகையால் அடுத்த அடிகளும் நினைவிற்கு வரும். அன்றியும், அவை கவிதைக்கு 31 (i) Winchester C. T. : Some Principles of Literary Criti cism p. 265. - - (ii) Hudson W. H. : An Introduction to tha Study of Literature, p. 120.