பக்கம்:பாட்டுத் திறன்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பாட்டுத் திறன் சிறுபிள்ளைகள் பூச்சிகாட்டி விளையாடியதைப் ப்ோலக் கண்ணனும் அக்காலத்தில் பூச்சிகாட்டி விளையாடியதை அக்காலத்துப் பெண்கள் கண்டு அநுபவித்து உகந்ததைப் பெரியாழ்வாரும் யசோதை நிலையிலிருந்து கொண்டு அந்த விளையாட்டை அநுபவித்து இனியராவதைக் காட்டும் பாசுரம் இது. ர்ே புகுதல், கடம்பு ஏறுதல், பணத்தில் பாய்ந்தாடுதல் இவை இயக்கப் புலப் படிமங்களைக் காட்டுவது. வேயின்குழல் ஊதுதல் சேவிப்புலப் படிமம், இக்கலவைப் படிமம் சிறுவன் கண்ணின் விளையாட்டினை நம் மனத்திரையில் எழச் செய்து கம்ன்ம மகிழ்விக்கின்றது. காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீள்முடி ஐந்திலும் கின்று கடஞ் செய்து மீள அவ னுக்கருள் செய்த வித்தகன்’ (பாய்ந்திட்டு-குதித்து, ள்ே முடி-ண்ேட படம்; மீளஇளைத்துச் சரணம் புகுந்த பிறகு) என்ற பாசுரத்தில் இந்நிகழ்ச்சி மீண்டும் குறிப்பிடப் பெறு வதைக் காணலாம், பொய்கை கலங்கல். பாய்ந்திடல், மீள்முடியில் கடனம் செய்தல் இயக்கப்புலப் படிமங்களாகும். கம்பன் காவியத்திலும் இத்தகைய மடிமங்களைக் கண்டு நுகரலாம். சித்திர பத்தியில் தேவர் சென்றனர் இத்துணைத் தாழ்ந்தனம் முனியும் என்று தம் முத்தின்ஆ கங்களும் முடியின் மாலையும் உத்த ரீயங்களும் சரிய ஓடுவார்." இராவணனுக்கு ஏவல் செய்யும் தேவர்கள் விரைவாகச் செல்லு வதைக் கூறும் பாடல் இது. சென்றனர், முகத்தின் ஆரம், முடியின் மாலை, உத்தரீயம் முதலியனசரிதல், ஒடுவர் ஆகியவை இயக்கப்டுலப்படிடுங்களக் காட்டுபவை. செழுமணிக் கொடிகள் என்னும் கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண் ஐயனை ஒல்லை வாவென்(று) அழைப்பதுபோன்ற தம்மா." 28. டிெ 8.9 : 7 29. கம்பா - சுந்த ஊர் தேடு-51 30 டிெ, பால. மிதிலை-1