பக்கம்:பாட்டுத் திறன்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 பாட்டுத் திறன் தனையே நாடிய சகுந்தலையின் மன உறுதியை வீரத்தின் கூறாகக் கொள்ளலாம். ஆனால், கவிஞன் அதைக் காதலின் கூறாகக் கொண்டுள்ளான். அவ்வாறே சிறையிருந்த செல்வியின் மன உறுதியை வீரமாகக் கொள்ளலாமேனும், காதலாகக் கொள்வதே மரபு. இவ்வாறே, இசைக் கலையிலுள்ள ஏழு ஸ்வரங்கள் ஒவ்வொன்றிலும் பிற ஆறு ஸ்வரங்கள் கலந்திருப் பதையும், கதிரவன் ஒளியிலுள்ள வெண்மை நிறத்தில் ஏழு கிறங்கள் கலந்திருப்பதையும் அறிஞர்கள் குறித்துள்ளனர். ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு ஒற்றுமையும் தோன்றும்; வேற்றுமையும் புலனாகும். சுவைகளின் அடிப்படையாகவுள்ள உணர்ச்சிகளை ஆராயும் போதும் ஒற்றுமையும் காணப்பெறும்; வேற்றுமையும் காட்சியளிக்கும். வேற்றுமையைக் கொண்டு தான் உணர்ச்சிகள் ஒன்பதாகப் பிரிக்கப்பெற்றன. மேற்கூறப்பெற்ற ஒன்பது இரசங்களுக்குமுரிய ஒன்பது பாவங்களும் எல்லா உயிர்களிடத்தும் பற்றியிருக்கும். ஆனால், சிலருடைய மனோ விருத்திகள் பல பிறப்புகளிலுள்ள வாசனை மிகுதியால் சில பாவங்களில் மிக்குச் செல்லும்; சிலவற்றில் குனறந்து காணப்படும். அதனால் இவை அறவே இல்லாதிருக் கும் என்று எண்ணுதல் கூடாது. வீரத்திற்குக் காரணமாக வுள்ள உற்சாகம், பயானகத்திற்குக் காரணமாகிய ஆச்சம், ரெளத்திரத்திற்குக் காரணமாகிய குரோதம் ஆகியவை எல்லா உயிர்களிடத்தும் மிகுதியாகக் காணப் பெறாமைக்குக் காரணம், பரம்பரையாகிய வாசனைகளின் குறைவே என்று கருத வேண்டும். சிருங்ககரத்திற்குக் காரணமாகிய காதல் எல்லா உயிர் களிடத்தும் காணப்படுவதற்குக் காரணம், பரம்பரை வாசனை மிகுதியே என்று கொள்ள வேண்டும். ஆதலின், இவ்வெல்லாச் சுவைகளையும் எல்லா உயிர்களும் ஒரே பிறப்பில் அநுபவித்தல் அரிதாகவுள்ளது. ஒரு சிலர் பக்தி, வாத்சல்யம் முதலியவற்றை யும் சுவைகளாகக் கருதுகின்றனர்; அது தவறு. அவை யெல்லாம் பாவமேயாகும். பக்தி இரசம் என்று வழங்குவது உபசாரமாக வழங்குவதேயன்றிக் காப்பியச் சுவைசற்றிச் சிறந்த நூல்களில் வழங்குதல் இல்லை. பக்தி என்ற பாவம் சிருங்காரத் தில் அடங்கும். பகவானிடத்தில் செலுத்தும் அன்பு, பக்தி; குழந்தைகளிடம் செலுத்தும் அன்பு, வாத்ஸல்யம், ԼՈ6մ)6XI` விடத்தில் செலுத்தும் அன்பு. காதல். இவ்வாறு அன்பு இடவேறுபாட்டிற்கேற்ப வேறு வேறு பெயர்களைப் பெறு