பக்கம்:பாட்டுத் திறன்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் - 3.18 கின்றது என்பதை காம் அறிய வேண்டும். இப் பாவங்கள் யாவும் சிருங்காரச் சுவையுள் அடங்கும். உலகியல் நிகழ்ச்சிகள் சுவையன்று : உலகியலில் நிகழும் செயல்களால் உண்டாகும் இன்பத்தை ரஸம் என்று கொள்ளுதல் பொருந்தாது. காரணம், சுவைக்குக் கூறும் இலக்கணம் எல்லாவற்றிற்கும் பொருந்துவதில்லை. உலகியற் செயல்களுள் ஈகை முதலிய செயல்களில் இன்பம் உண்டாதல் போல் அழுகை, இழிவரல், அச்சம், வெகுளி முதலியவற்றில் இன்பம் உளதாதல் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதனால்தான் சுவை இலக்கண நூலார் உலகியலின் பத்தைச் சுவை என்று கொள்ளாமல் நாடகத்திலாவது காவியத் திலாவது அச்செயல்கள் கிகழும்போது அவற்றைக் காண்டலும் கேட்டலும் செய்யும் நல்லறிவாளருள்ளத்தில் விபாவம் முதலியவற்றால் உண்டாகும் சுவையையே இரசம் என்று அறுதியிட்டனர். உலகில் ஒரு தாய் தன் இளமகன் இறந்ததைக் குறித்து அழுதலைக் கேட்குங்கால் நமக்குத் துயரம் உண்டா கின்றது. ஆனால், மேககாதன் இறந்து பட்டபோது இராவணன், மண்டோதரி புலம்புவதாக உள்ள பாக்களைப் படிக்கக் கேட்குமிடத்து அளவிலா மகிழ்ச்சி உண்டா இன்றது, அவலத்திலும் இன்பத்தைக் காண்பதால்தான் அப்பாக்களைப் பன்முறை கேட்டும் படித்தும் இன்புறுகின்றோம். தண்டியலங் காரசார ஆசிரியரும், இவை (ஒன்பது சுவைகள்) காட்டியத் திலும் காப்பியத்திலும் செய்திறத்தினாலும், சொற்றிறத் தினாலும், தூண்டப்பெற்ற வாசனையின் திண்மையினால் தம்மவைபோல அனுபவ நிலையில் வந்து ஆனந்தமாகவே சிற்பன. இவற்றின் விசாரணை வடநூலுள் விரிந்து கிடக் கின்றது,' என்று கூறியிருப்பது எண்ணி உணர்தற்பாலது. மேலும், இலக்கியத்தில் காணப்பெறும் எல்லாவித உணர்ச்சி களும் படிப்போருக்கு இன்பம் அளிப்பதால் அவுையாவும் சுவைகள்' என வழங்கப் பெற்றன என்றும், உலகியல் விகழ்ச்சி களின் உணர்ச்சிகள் அங்ங்ணம் இன்பம் அளிப்பதில்லை என்றும் ஈண்டு அறிதல் வேண்டும். சிருங்காரம் சிருங்காரத்தைப்பற்றிச் சிறிதுகூறுவாம்.சுவை நூலார் சிருங்காரத்தை முதல் இரசமாகக் குறிப்பிட்டுள்ளன. ?, தண்டியலங்கா சாரம் பக்கம் #3,