பக்கம்:பாட்டுத் திறன்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுக் தி றன் . з 17 என்று கூறியிருப்பது காண்க. பண்டைத் தமிழ் இலக்கியங் களிலும் பிரிவைப்பற்றிய செய்யுட்களே அதிகமாகவுள்ளன். சங்க நூல்களில் கூறப்படும் ஐந்திணைகளுள் குறிஞ்சி ஒன்று மட்டுமே சம்போக சிருங்காரம்; மற்றைய நான்கும் விப்ரலம்ப மே. தலைவன் பிரிவினாலாய் துன்பத்தைப் பொறுத்து ஆற்றி யிருக்கும் நிலை, முல்லைத் திணையாகும். ஆற்றமுடியாது வாய்விட்டு அரற்றும் கிலை, கெய்தல் திணையாகும். இத்தகைய பாகுபாடுகள் வடநூல்களில் காணப்பெறவில்லை. கைக்கிளை, பெருந்திணைகள் சிருங்கார ஆபாசம் (சிருங்காரப் போலி) ஆகும். ஆயின், கோவை நூல்களில் முதலில் கூறப்பெற்றுள்ள கைக்கிளை பூர்வானுராகமே; சிருங்கார ஆபாசம் அன்று. அக நானூற்றில் 320 செய்யுட்கள் பிரிவைப்பற்றியன. ஐங்குறு நூற்றுள் குறிஞ்சித்திணை செய்யுள் தவிர மற்றைய நானூ றும் பிரிவினைப்பற்றியனவே. வடமொழியிலும் விப்ரலம்ப சிருங்காரமே சிறப்புடையதாகக் கொள்ளப்பெற்றுள்ளது. விப்ரலம்ப சிருங்காரத்தில் பிரிவினால் வருந்தும் தலைவன் தலைவியர் ஆலம்பன விபாவம். கந்தவனம், பொய்கை, நிலவு, குளிர்நீர், மலர், தாம்பூலம், அணை (மெத்தை) முதலியன உத் தீபன விபாவம். வெதும்பல், மெலிதல், புலம்பல், கண்மங்குதல் தளர்நடை, அதுகாரம் (பொருநுதல்) செய்யுள் கடிதம் எழுது தல், அவரெழுதியதனைப் படித்தல், தமதியல்பினை மறைத்தல் செய்தியை வினவுதல், அன்பு தெரிவித்தல், தண்மையன துய்த் தல், இறக்க முயலுதல், தூதுவிடுதல் முதலியன அனுபாவம். கண்ணிர், பசலை, ஸ்தம்பம், நடுக்கம் முதலியன சாத்விகபாவம். ஐயம், ஒளத்ஸ் அக்யம் (விரைவு), கலானி (நலிவு), கித்திரை, கனவு, சிங்தை (கிணைதல்), அளவியை, சிரமம், கிர்வேதம், (விரக்தி), உக்மாதம், ஜடதை, வியாதி, அபஸ்மாரம், மரணத் தின் முன்நிலை முதலியன சஞ்சாரி பாவம். விப்ாலம்பத்தை மூன்.றுவகையாகவும், கான்குவகையாகவும்; ஐக்துவகையாகவும் பிரித்துக்கூறுவர் வடநூலாசிரியர்கள். தமிழிலுள்ள அகப்பொருட்கோவை நூல்கள் யாவும் சிருங் கார இரசத்தை உடையனவே. ஆகலின், அவற்றில் சிருங்காரம் ஒழிந்த ஏனைச் சுவைகள் உள்ளனவாகக் காட்டுதல் அமைவ தன்று. திருச்சிற்றம்பலக் கோவையாரின் உரையிலுள்ள சுவை பற்றிய குறிப்புக்கள் பெரும்பாலும் பிழைபாடுடையன. அவ்