பக்கம்:பாட்டுத் திறன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 21 இருது பர்ணன். ஏற்கெனவே மணமாகியுள்ள அவன் மீட்டும் தமயந்தியை விரும்பி ஓடிவந்தானாதலின், அவனுடைய குணத்தை வண்டின்மீது வைத்துரைத்து அதனை உள்ளுறைப் பொருளாகப் பெற வைத்தமையால் இஃதும் உள்ளுறை யுவமத்திற்கு எடுத்துக் காட்டாயிற்று. - இனி, இறைச்சியை நோக்குவோம். இறைச்சிப் பொருள் உள்ளுறை யுவமத்தைவிட மிகவும் துட்பமானது; அதனை அறிதல் மிகவும் அரியது. இதனை உடனுறை என்றும் வழங்கு வர். அஃதாவது, உடனுறைவதொன்றைச் சொல்ல, அதனாலே பிறிதொரு பொருள் விளங்குவது. தலைவன் ஒருவன் தலைவி யொருத்தியுடன் நீண்ட நாள்களாகக் களவு முறையில் பழகி வருகின்றான். அவன் அவளைப் பகலிலும் இரவிலும் வாய்ப்பு கள் நேரிடும் பொழுதெல்லாம் சந்திப்பதுண்டு. ஒரு சமயம் அவன் பகலில் வருகின்றான். தன் தலைவி இங்ங்னம் களவொழுக்கத்தில் வாழ்ந்து வருவதைத் தோழி விரும்பவில்லை. காரணம், குறிகளை அமைத்துக் கொடுப்பதில் பல சங்கடங்கள் உண்டாவதோடன்றி, தலைவியின் மறைக்தொழுகும் செயலைக் குறித்து அக்கம் பக்கங்களில் அலரும் எழுந்து விடுகின்றது. அன்று தலைவனுக்குச் சாக்குப் போக்குகள் சொல்லித் தலைவியைச் சந்திக்க முடியாது என்று தலைவனை அனுப்பிவிட கினைக்கின்றாள் தோழி. அவ்வாறு கினைப்பதுடன் தலைவியை ஊரார் அறிய விரைவில் மணந்து கொள்ளவேண்டும் எ ன்ற குறிப்பினையும் தருகின்றாள். 'புதியராய் வந்த பாணர் டு கின்ற மெல்லிய இசைப் பாட்டைப் போல் வலம்புரிச்ச கு ஒலிக்கும் துறையையுடைய தலைவனே, எமது அன்னை புன்னை எமக்குத் தமக்கையாகும் முறையினைச் சொல்லியிருக்கின்றாள். எமக்குத் தமக்கையாகிய இப் புன்னையின் எதிரில் உன்னே டு ககைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கப்படுகின்றோம். இனிமேல் தலைவியை இங்குச் சந்திக்க முடியாது' என்று கூறு கின்றாள் தோழி. இந் நிகழ்ச்சியை வருணிக்கும் கற்றிணைப் பாட்டு : - விளையா டாய மொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய. கெய்யெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப நும்மினும் சிறந்தது துவ்வை யாகு மென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/33&oldid=812742" இலிருந்து மீள்விக்கப்பட்டது