பக்கம்:பாட்டுத் திறன்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 பாட்டுத் திறன் சுட்டிய' பெருஞ்செல்வர்கள். இச்சுவையின் பெற்றியை அறியா தவர்கள்தாம் தமிழில்’க, கர்வகையைத்தவிர வேறு என்ன இருக்கின்றது' என்று எள்ளுவ்ர். இன்னும் ஆங்கில இலக்கியங் களை மட்டிலும் படித்துவிட்டிச் சிலர் கமது இலக்கியங்களில் அதிகமாகத்தென்படும் சிருங்காரத்தை இகழ்ந்து கூறுவதையும் காண்கின்றோம் இலக்கியங்களில் சிருங்காரத்தை அனுபவிப்பதற்கு உள்ளத் தூய்மையும் சுவைக்கும் பழக்கமும் வேண்டும். நமது மனத்தில் கிடக்கும் அற்பமான காம வெறியாகிய சிந்தனையுடன் காவியங் களைச் சுவைக்கப் புகுதல் அவற்றை இகழ்வதாகும். கற்பனை யுலகில் காணும் இன்பக் கனவுகளாகிய வருணனைகளை உண் மை உலகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மதியினம் என்பதை அறிஞர்களே அறிவர்; அம்மையப்பன் திருவிளையாட்டே காதல் சுவைஎன்பது ஆன்றோர் கொள்கை. அதையுணர்ந்து தான் கவிஞர்களும் சிருங்காரத்தை உலகத்தின் அடிப்படைத் தத்துவமாகக் கொண்டு தம் கவிதைகளிலும் மேற்கொண்டுள்ள னர். உள்ளக் கனிவுடன் இலக்கியங்களைத் துய்ப்பவர்கள்தாம் இந்த உண்மையை அறிவர். இளமையிலிருந்தே மாணாக்கர் களுக்கு நல்ல முறையில் இலக்கியப் பயிற்சியளித்தால் அவர் களிடத்து இக்கனிவு பிறக்கும். அக்கனிவு பெற்றால் உலகில் எல்லாவற்றையும் இன்ப மயமாகக் காணும் ஆற்றல் தோன்றக் கூடும். உலக இயல்பிற்குப் படம் போலிருக்கும் கலைகளிலாவது சுவைகளை உணர்ந்து இன்புறக் கற்றுக்கொள்ளட்டும் என்றே கமது முன்னோர்கள் நாடகங்களிலும் காட்டியங்களிலும் இலக் கியங்களிலும் சுவைகளைத் திறமையுடன் வளர்த்துக் காட்டி யுள்ளனர். துன்பக்கடல் போன்ற இவ்வுலகில் மம்மர் அறுக்கும் மருந்தாக இருந்து இன்பம் பயக்க வல்ல இலக்கியங்களை காம் கவனிக்கா விட்டால், கமக்கு உலகில் ஆறுதல் அளிக்கக்கூடிய பொருள்களே இல்லை என்றாகி விடும். 、* க ைகடவுள்; க. காதல்