பக்கம்:பாட்டுத் திறன்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் - 333 தோள மருவுதலையும் மறந்து. போர் ஒன்றே இன்பப் பொருள் என்று கருதி வாழ்கின்றான். இணைவிழைச்சிதின்இத்திற்குச் சிறந்ததாகியகூதிர்க்காலத்தில் அவன் துணைவி அவனது பிரிவை ஆற்றாளாய் அரன்மனையிலிருந்து ஒருபொழுது ஒருழியாகக் கழித்துவருகின்றாள். அவளுக்கு அது கெடிதாகிய வாடைக் கால மாகத் துன்பம் செய்கின்றது. அவனோ பகைமேற் சென்று பாசி றையில் கள்ளென்னும் யாமத்தும் பள்ளி கொள்ளானாய் வாட் புண்பட்ட வீரரைத்தேற்றிக் கொண்டிருக்கின்றான். பகை முடி துச்செல்வதற்குத் துணையாக இருந்த வாடைக்காலம் அவனுக்கு நல்வாடையாக உள்ளது.காதலும் வீரமும் தமிழர் வாழ்க்கையின் இரண்டு கூறுகள். எனவே, வீரனாக விளங்கிய நெடுஞ்செழி யனைக் காதலையும் நுகர்ந்து வாழும்படி நக்கீரர் நெடுநல்வடை என்ற கவிதையில் அவனுக்கு அறிவுகொளுத்துகின்றார். இங் வனம் காதலையும் துறந்து போரின்பத்தையே பேரின்பமாகக் கருதி வாழும் அவன் வீடுபேற்றைப்பற்றி எண்ணுவதெங்ங்னம்? மாங்குடி மருதனார் அவனது நிலையையுணர்ந்து அவனை கன்னெறியில் ஆற்றுப்படுத்த விழைகின்றார். அவனை கிலை யாமை முதலிய மெய்ப்பொருளை யுணரச்செய்து வீட்டின்பம் எய்தும்படி தூண்டுகின்றார். "உனது வாணாள் எல்லையுடை யது. உனக்கு முன்னர் இப்பரந்த உலகினைப் புரந்து மறைந்த மன்னர் கடலிடு மணலினும் பலர். நீ அவர்களுடன் சேர்வதன் முன்னர் வாழ்க்கையின் பயனை நன்கு நுகர்க' என அறிவுறுத்து கின்றார். நீதியைக் கற்பனை, அநுபவம் ஆகிய இரண்டுடன் குழைத்துத்தந்த பாட்டாகையால் அஃது இரண்டாயிரம் யாண்டு கள் கழிந்த பின்னரும் நம்மிடையே வாழ்கின்றது. அக்கவிதை ?82 அடிகளைக் கொண்டு நீண்டிருத்தலின் வாழ்வின் உண்மை களைக் கூறும் பகுதிகளை மட்டிலும் ஈண்டுத் தருவோம்.

பருந்து பறக் கல்லாப் பார்வற் பாசறைப் படுகண் முரசம் காலை இயம்ப, வெடிபடக் கடந்து, வேண்டுபுலத்து இறுத்த பனை கெழு பெருங்திறல், பல்வேல் மன்னர் கரைபொருது இரங்கும், கனையிரு முந்நீர்த் திரையிடு மணலினும் பலரே, உரைசெல மலர்தலை உலகம் ஆண்டுகழிந் தோரே. அதனால்............

冰 冰 米