பக்கம்:பாட்டுத் திறன்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாட்டுத் திறன் "மறமிகு சிறப்பிற் குறுகிலமன்னர் அவரும், பிறரும், துவன்றிப் பொற்பு விளங்கு புகழவை கிற்புகழ்ந்து ஏத்த, இலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மனம்கமழ் தேறல் மடுப்ப, நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி, பெரும! வரைந்து பெற்ற கல்ஊழி யையே' மதுரை யிடத்து வைத்துப் புலவர் கூறிய காஞ்சியாதலின் இது மதுரைக்காஞ்சி' எனப்பெயர் பெற்றது. தனக்கோர் இணையில்லாத விட்டின்பம் ஏதுவாக அறம்பொருள் இன்பங் களும், யாக்கையும் செல்வமும் இளமை முதலியனவும் கிலை பேறில்லாதவை எனச் சான்றோர் எடுத்துரைப்பது காஞ்சி யாகும். 'கற்றறிந்தார் ஏத்தும் கலியில் இத்தகைய வாழ்க்கையின் உண்மைகள் அழகாகப் பொதிந்துள்ளன. நேர்முகமாகச் சொன்னால் உள்ளம் கோவும் என்று கருதியும், விளக்கமாகத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியும் கல்ல நல்ல இடமறிந்து பல உவமைகள் வாயிலாக அங்கு இவ்வறவுரைகள் கூறப்பெறு கின்றன. தமிழ்க் கவிஞர்கள் மெய்ப் பொருளையும் இன்பத்தை யும் குழைத்துத் தருவதில் தலைசிறந்தவர்கள். பாலைக்கலியில், 'உண்கடன் வழிமொழிக் திரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கை; அஃதின்றும் புதுவ தன்றே என்று வந்துள்ள பாடற்பகுதி சந்தர்ப்பத்தையொட்டி அழகாக அமைந்துள்ளது. தலைவன் தல்ைவிபால் பெற்ற இன்பத்தை யெல்லாம் மறந்து பொருள்வயிற் பிரிந்து செல்ல கினைக்கின் றான்.தோழி"பசியுடையார் அஃதில்லாரிடத்துச்சென்று தாழ்வு சொல்லி இரந்து கின்று உணவுக்கடன் பெற்றுத் தம் பசிதீர்வது போல, முன்னர் வேட்கையையுடைய நீ வேட்கை பிறக்கின்ற பருவத்தளாய தலைவியிடம் வந்து தாழ்வு சொல்லி இரந்து கின்று அவளது கலத்தினை நுகர்ந்து உனது வேட்கையைத் தீர்த்துக் கொண்டாய். கடன் வாங்கினவர்.அக்கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது முகஞ்சுழித்து சிற்பது போன்று வேட்கை 81. டி.துரைக் காஞ்சி-வரி 281 87; 778.82. 32. பாலைக்களி-21.