பக்கம்:பாட்டுத் திறன்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 368 சங்கடப் பட்டுக் கொண்டிருந் திருக்கும். இக் கவிதையில் பிராணவாயு, நெருப்பு முலாம், சுப்பிரபாதம், தீப்பெட்டி, சாணைக்கல், எதிர்பாராமுத்தம்-இவை கவிஞரை யும், சாட்டை பாட்டையும் உணர்த்தும் அற்புதத்தைக் கண்டு மகிழலாம். இக்கவிதைகளில் சொற்களில் பொருளை நேரடியாகத் தரும் முயற்சிக்குப் பதிலாகக் குறியீடுகளைக் கையாள்வதன் மூலம் பொருளையே படிப்போர் மனத்தில் விரியச் செய்கின்ற பாங்கைக் காணலாம். எல்லாச் சொற்களும் பொருள்குறித் தனவே' என்ற தொல்காப்பிய நூற்பா சொற்கள் பொருள் களின் அடையாளங்களாகும் என்பதைக் குறிக்கின்றது. கவிஞன் கையாளும் சொற்கள் என்னும் அடையாளங்கள்மூலம் காம் பொருளை நாடிச்செல்லுகின்றோம். அங்ங்னமின்றிச் சொற்களின் வழிகாட்டலுக்குக் காத்திராமல் கவிஞன் வெளி யிடும் பொருளைப் படிப்போர் நேரடியாக அடையச்செய்யும் உத்தியே குறியீடு என்பதை இக்கவிதைகள் உணர்த்துகின்றன. (3) துல்லியம், தெளிவு (Preciseness) இப்பண்பும் புதுக் கவிதையில் காணப்பெறும் ஒரு சிறப்பாகும். கம்பன் கண்ட இல்லறம்' என்ற கவிதையில், காதல் என்பது விரித்த வர்களே அகப்பட்டுக் கொள்ளும் விசித்திர வலைதான் இங்கே காளை ராமனும் கன்னி சீதையும் Qrв காத லைகளை விரித்த போது 7. தொல். சொல். நூற்-1 8, காத்திருந்த காற்று பக், 22