பக்கம்:பாட்டுத் திறன்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்-23 இ காதல் உணர்வும் முருகுணர்வும் காதல் உணர்வு உயிர்களனைத்திற்கும் பொதுவானது. தொல்காப்பியரும், எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்' என்று இதனை நூற்பா அமைத்துக் காட்டுவர். இந்த இன்பத்தை அடிப்படை உணர்வாகக் கொண்டனர் பண்டையோர்; ஒருவனுக் கும் ஒருத்திக்கும் ஏற்படுத்தும் உறவு எனவும் கருதினர். ஊழ் வழியால்-பாலதாணையால்-பெறவேண்டிய உணர்வு என்றே போற்றினர். பக்தி இயக்க காலத்தில் இதனை நாயக-நாயகி' பாவனையாகக் குறியீடு இட்டு மகிழ்ந்தனர். சிவான்மாபரமான்மா உணர்வு என்றும் கொண்டனர். ஆனால் இன்றைய மக்களில் பெரும்பாலோர் இந்தத் தெய்விக உணர்வை மாசு படச் செய்து விட்டனர்; செய்தும் வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இந்தக் காதலுணர்வைப் போற்றியும் வருகின்றனர். இந்த சிலைமைகளைப் புதுக்கவிஞர்கள் தம் கவிதைகளில் தோலுரித்துக் காட்டுகின்றனர். இவற்றைக் காண்போம். உலக இன்பத்தைச் சிற்றின்பம் என ஒதுக்கிக் கற்பனையான தெய்வநாட்டத்தைப் பேரின்பம் எனப் போற்றுவது நம் நாடு. இந்தப் போக்கினைத் தகர்த்தெறிவதுதான் “எத்தனை கோடி இன்பம்வைத்தாய்' என்ற பாரதியாரின் குரல். பாரதியாரை யும் மிஞ்சிவிடுகின்றார் புதுக்கவிஞர் ஒருவர்: 1. தெ ல் பொருள்-பொருளியல் - 27. 2. தோ. பா : இறைவன: இறைவா!