பக்கம்:பாட்டுத் திறன்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 பாட்டுத் திறன் மலைமுகடுகளிலே முத்திடும் மேகச் சிதறல்களிலே கடலலைகள் மகிழ்ச்சியுடன் வருடிச் சென்ற வெண்குறுமணலிலே என்றெல்லாம் காட்டும் போக்கில் கவிதை நீண்டு செல்கின்றது. அக்தி வானத் தங்க விதானத்திலே வைகறைப் புத்திளம் பசும்புல்லின் பனிமுகத்திலே தும்பிக் கால்களின் மகரந்தத் துளிகளிலே ஒளிமின்னல் வீச்சினிலே கலைஞனின் தேன்சொட்டும் காவியப் பாக்களிலே கதிரறுக்கும் கைகளின் அசைவினிலே தறிகெய்யும் கைத்தாண்டவத்திலே கொல்லர் உலைத்தீ செவ்விரும்பினிலே குயவர் சுற்றும் புதுமண் பொலிவினிலே வண்டிக்காரன் பாட்டொலியினிலே வண்ணார் பணியில் சோசோ'ஒசையிலே எங்கும் நீயே உறவாடுகிறாய் என்கின்றார்; அழகிற்கு உருவம் கொடுப்பதற்கென்றே பெண் களைப் படைத்ததாகவும் கருதுகின்றார் கவிஞர். இயற்கை பெண்களைப் படைத்தது பெண்களின் ஒவ்வொரு அங்க லாவண்யத்திலும் அதன் அசைவிலும் இயே கலந்துள்ளாய் முகிலன்ன கற்றைக் குழலிலிருந்து மலரன்ன திருவடிகள் வரை இயே கர்த்தனம் செய்கின்றாய் என்று கூறும் கவிஞர், அச்சம் விளைவிக்கும் காட்சிகளிலும் அழகு கலந்திருப்பதாகச் செப்புகின்றார். கடுமையிலும் பயங்கரத்திலும் கூட நீயே கலந்திருக்கிறாய் விடப்பாம்பு ஊர்ந்து செல்லும் அசைவினிலும் புலியின் முக காம்பீர்யத்திலும் இணைந்துள்ளாய்