பக்கம்:பாட்டுத் திறன்.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 பாட்டுத் திறன் ஊரை உலகை உழைப்பு உயர்த்தும் உழைப்பவனை அது, உயர்த்துகின்றதா? ஜனகண மனவின் பஜனை இரைச்சலில் மனிதனின் தேம்பலை மறைத்தே விட்டோம் உழைப்பவனை உதாசீனம் செய்யாமல் அவர்கள் தட்டினால் திறங்கள்-தவறினால் அவர்கள் கதவையே தகர்த்து விடுவர்! கேட்டால் கொடுங்கள்...கொடுக்காவிட்டல் இனிமேல் அவர்களே எடுத்துக்கொள்வர்! உழைப்பவன் உள்ளங்கை ரேகை நதிகளில் காட்டுக் கப்பல் நகரும் காளிது. கூலி விவசாயி கால்களின் சேறே ஜனநாயக மங்கைக்குச் சங்தனம் ஆகும்! விறகு பிளக்கும் வேலையாள் கைகளே அரசியல் சட்டத்தை அதிகாரம் செய்யும்: உழைக்கக் கையோடு பிறக்கும் குழந்தை-வயிரப் பையோடு பிறப்ப தில்லை-வாழ மூச்சோடு பிறக்கும் குழந்தை-காசு முடிச்சோடு பிறப்பதில்லை ஆனால் சிலர்க்கு மட்டும் எச்சில் துப்ப இளம்பிறைக் கிண்ணம் எப்படிக் கிடைத்தது? புளித்த கஞ்சி பொத்தல் போட்ட தகரக் குவளை ஏன் பலர் இடத்தில்? இன்னும் அதிகநாள் இது கடக்காது... இன்னும் அதிகநாள் இது கடக்காது. சொத்துரிமை என்னும் சொத்தைப் பல்லைப் பிடுங்கி எறியப் பின்வாங்கி விட்டால் ஜனநாய கத்திற்கு இனிமேல் சவக்குழி ஒன்று மட்டுமே உறுதி யாகும். தருமப் பசப்பு சத்திய மினுக்கு சன்மார்க்கத் தளுக்கு காந்தியக் குலுக்கு இந்த வேடங்கள் இனிமேல் நியாயத் தீக்குளிப் பிற்கே தயாராக வேண்டும்!