பக்கம்:பாட்டுத் திறன்.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் ? கைத் தளமாக அமைந்தது. உரிப்பு' என்ற தலைப்பில் ஒரு கவிதை: - இந்த ககரச் சுவர்கள் ககராத பாம்புகள் அடிக்கடி வால்போஸ்டர் தோல் வளர்ந்து தடித்து விட ஐ ள்ளிரவில் அவசரமாய்ச் சட்டையுரித்துப் புதுத்தோலில் விடிந்து பளபளக்கும் பட்டணத்துப் பாம்புகள்இந்த நகரச் சுவர்கள். இங்குக் கவிதையிலுள்ள படிமம் குறியீடாகி சிற்கும் அற்புதத் தைக் காணமுடிகின்றது.நகரச் சுவர்களில் ஒட்டப்பட்டும் பின்னி ரவில் கிழிக்கப் பெற்று மீண்டும் ஒட்டப்படும் விளம்பரச் சுவரொட்டிகள் பாம்புகளாகக் குறிப்பிடப் பெறுகின்றன.சுவ ரொட்டியைக் கிழித்தல் பாம்புசட்டை உரிப்பதுபோல் தோன்று கின்றது.புதுத் தோலில் பாம்பிற்கு இருக்கும் பளபளப்பும் மினு மினுப்பும் புதிய சுவரொட்டி சுவருக்குத் தந்துவிடுகின்றது! எனவே, சுவர்கள் பட்டணத்துப் பாம்புகளாகின்றன. விளம்பரச் செய்திகளை அருவருக்கச் செய்யும் உணர்வு கவிதையால் ஏற் படுத்தப் பெறுகின்றது. உரிப்பு' என்ற தலைப்பும் கள்ளிரவில் அவசரமாய்ச் சட்டை உரிக்கும் செயலும், விடியற் காலத்தில் புதுத் தோலில் பளபளக்கும் தன்மையும் பாம்புக்கு மட்டுமா? என்றவினாவை எழுப்புகின்றபொழுது பாலுணர்வு கவிதையின் உட்பொருளாக அமைந்திருப்பது தட்டுப்ப்டுகின்றது. மனிதன் பாம்பாகப் பளபளக்கின்றான். அவன் நகர்ந்து திரிவதால் சுவர் கள் நகராத பொருள்களாக கிற்கின்றன. இங்குப் படிமம் குறியீ டாகும் போத் கவிதையின் தரமும் பன்மடங்கு உயருகின்றது. அப்துல் ரகுமானின்."பால்வீதி'என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள பலவும் படிமம் குறியீடுகளின் வழியாகவே படிப்போரிடம் அது பவத்தை எழுப்பி விடுகின்றன. தனிமனிதததுவ அடிபபடையல இன்றைய மனிதனின் காதல், இழப்பு, இரக்கம்,சீற்றம், விரக்தி, இயலாமை, குழப்பம் ?. உதய நிழல் பக்.கி,