பக்கம்:பாட்டுத் திறன்.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 பாட்டுத் திறன் கனதனம் இரண்டும் தைத்தே அப்புறம் உருவிற்றென்றே அங்கையால் தடவிப் பார்த்தாள்; செவ்வரியால் சுடும் விழியால் அறையை வலம் வந்தேன் என் காண்பேன் என்னையல்லால் யான்? தாள்புரட்டுக் தொறும் பெரும் கிளர்ச்சி பின்னும் புதிதாய் மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே என் செய்ய? இன்னும் நனவோடை இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இங் கும் பல காட்சிகள். அவற்றுள் ஒன்று பஞ்சணையுள் தஞ்சம் அடைய எண்ணும் போது தற்செயலாக அவனுடைய விழி சாள ரத்தினூடே நோக்குகின்றது. எதிர் வீட்டுக் குல விளக்கைக் காண்கின்றான். அவள் பற்றிய வருணனை கனவோடையாகப் பிரவகிக்கின்றது. படுக்கையில் கிலை கொள்ளவில்லை; துயி லமுகி ஊடி கின்றாள். காலையிலும் மாலையிலும் கண்ட காட்சி கள் எல்லாம் ஒருருவாய்த் திரண்டு பெண்பேயாய்த் தோன்றி அந்த மனிதனை விரட்டுகின்றது. எரிக்கும் வெயிலதனில் துடிக்கும் என்பிலதாய் தவிதவித்து மயங்கியபோது உலகத்துப் பெண்னெல்லாம் அணங்காகி வெறியூட்ட விழித்துயிர்த்து மயங்கியோர் கணம் கழித்து விழித்து உயிர்த்து நரகம் பெருநரகம் நரகத்தில் நெளிகின்ற காமப்புழுவாகப் பெண்ணைக் காண்பவன் அழகில் ஈடுபட்டு அதனைத் தனது கனவோடை ஊற்றாகக் கொள்ளுகின்றான் என்பதைக் கவிதை காட்டுகின்றது. பெண்ணின் பெருமை பேசப் பெறும் தமிழகத்தில் அவள் காம ஒழுக்கின் ஊற்றாகக் காட்டப் படுகின்றாள். இதுதான் கன வோடை. காண்பவற்றிலெல்லாம் காமம் ஒளிந்து கொண்டு இரைநோக்கிய புலிவிழியாய் மனிதனை மன உளைச்சல்கட்கு