பக்கம்:பாட்டுத் திறன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 39 நரம்புத்தொகுதி, தசைகள் ஆகியவை இப்பகுதியினுள் அடங் கும். இப்பிரிவும் இப்பிரிவிலுள்ள வேற்றுமைகளும் முற்றிலும் பொருத்தமானவை யென்று கூற இயலாது. இவை இணைந்தும் செயற்படுகின்றன. எ-டு: குருதியோட்டம் நிலைநிறுத்தச் செயலிலும், பொருத்தமுறும் தொழிலிலும் பங்கு பெறுகின்றது. நிலை கிறுத்தும் உறுப்புகளின் கிலைமையினால் நம்முடைய பொருத்தமுறும் செயல்கள் பாதிக்கப்படுகின்றன. பொருத்தமுறுதல் : மனிதன் ஓயாது சூழ்நிலையுடன்: பொருத்தப்பாடு அடைதலையே கல்வி' என்று வழங்குவர் உள வியலார். கவிதையை அனுபவித்தல் கல்வியினுள் அடங்குகின் றது. கவிஞன் ஒருவன் தன்னுடைய கருத்துகளையும் உணர்ச்சி களையும் தன்னுடைய படைப்பாகிய கவிதையினுள் அடக்கி வைத்துள்ளான். எங்கோ தயாராகும் உணவு வகைகளும் மருந்து வகைகளும் நம் உடல் துய்த்தற்கு வேண்டிய சத்துப் பொருள் களை அடக்கி வைத்திருப்பதைப் போல, கவிதைகளும் நம் உள்ளத்திற்கு வேண்டிய கருத்துகளையும் உணர்ச்சிகளையும் அடக்கி வைத்துள்ளன. கவிஞன் வாழ்ந்த சூழ்நிலையும் அதில் பொதிக் துள்ளது. க வி ைத க ைள ப் படித்துச் சுவைக்கும் பொழுது காம் கவிஞன் வாழ்ந்த சூழ்நிலையுடன் பாவனையில் பொருத்தமுறுகின்றோம்; கவிஞன் பெற்ற உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளுகின்றோம். எனவே, ஈண்டுப் பொருத்தமுறுதலில் பங்குபெறும் உறுப்புகளை அறிதல் இன்றியமையாதது என்றாகின்றது. தூண்டல்-துலங்கல் விளக்கம் நம்முடைய உடலில் நிகழும் செயல்களும் நம் மனத்தால் மேற்கொள்ளப்பெறும் செயல்களும் துரண்டல்' - துலங்கல்' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதைச் சிறிது விளக்குவோம். திடீர் என இடி இடிக்கின்றது. அவ்வொலி கேட்டுத் திடுக்கிட்டெழுகின்றோம். மின்னல் கண்கூச மின்னிப் பொலிகின்றது. அது கண்டு ஒளி பொறுக்கமாட்டாமல் கண்ணை மூடுகின்றோம். மழை பெய்தால் குடை பிடிக்கின்றோம். குளிர் எடுத்தால் மயிர்ப்படாம் போர்த்திக் கொள்ளுகின்றோம். இவ்வாறு இயற்கைப் பரப்புசூழ்நிலை- கம்மைப் பல்வேறு விதமாகத் தாக்குதலைத்

  1. 6. Goog #3 on so - Environment 17. assi - Education. 18. ga siri-40 - Stimulus. 19, 3, **** - Response,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/51&oldid=813113" இலிருந்து மீள்விக்கப்பட்டது