பக்கம்:பாட்டுத் திறன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 4f வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் எழாது. எது பயனு டையதாகும் என்பது நம்முடைய குடிவழி’, முன்னதுபவம், கம் உடல் வயது'மனவயது24 முதலிய கூறுகளைப் பொறுத்தது. பொருத்தமுறுவதில் பங்குபெறும் உறுப்புகள்: இனி, பொருத்தமுறுவதில் பங்கு பெறும் உறுப்புகள் யாவை எனக் காண்போம். பொருத்தமுறுதலில் பங்கு பெறும் உறுப்பு களை மூவகையாகப் பகுத்துப் பேசுவர் உளவியலார். அவை: (1) கொள்வாய்கள்’ இவை தூண்டல்களை ஏற்கும் உறுப்புகளாகும். எடுத்துக்காட்டாக மணியொலி செவிகள் மூலம் புகுகின்றது. மின்னொளி கண்கள் மூலம் புகுகின்றது. சூடு, குளிர் போன்றவை தோலின் மூலம் புகுகின்றன. இங்ங்னம் ஐம்பொறிகளிலுள்ள தனிப்பட்ட உயிரணுக்கள் மூலம் சூழ்நிலையைப் பற்றிச் செய்திகள் புலப்படுவதால் அவற் றைப் புலன்கள்' என்கின்றோம். புலன்கள் கொள்வாய்கள் ஆகும். கொள்வாய்களைத் தாக்கும் விசைகளைத் தூண்டல்கள் என்றும், தாண்டலுக்கேற்ப நம்மிடம் நடைபெறும் எதிர்வினை யைத் துலங்கல் எனவும் உளவியலார் வழங்குவர் என மேலே குறிப்பிட்டோம். (2) இயங்குவாய்கள்: இவை இயங்கும் கருவிகள். புகுவாய் வழியாகத் தாக்கலை அறியும்பொழுது அதற்கேற்ப எதிரூன்றி நிற்கின்றோம். ஒளி, ஒலி, குடு, சுவை, மணம், அமுக்கம், வலி போன்ற தாக்கல்களுக்கு ஏற்பத் துலங்கும் உறுப்புகள்தாம் இயங்குவாய்கள்." இயற்கைப் பரப்பானது நம்மைப் பலவகையி லும் தூண்டுகின்றது. அதற்குத் தக நாமும் துலங்குகின்றோம். சுரப்பிகளும் தசைகளும் இயங்குவாய்கள். சில எடுத்துக்காட்டு கள் இவற்றைத் தெளிவாக்கும். பேரொலி கேட்டுத் திடுக்கிட் டெழுகின்றோம்; பேரொளி கண்டு, கூசிக் கண்களை மூடு கின்றோம். ஒலி கேட்டலும் பேரொளி கண்ணில் படுதலும் தூண்டல்கள்; திடுக்கிட்டெழுதலும் கண்களை மூடுதலும் 22. 54-aig-Heredity. 23. o-t- és a uigi-Physical Age. 24. Lo or su ugu-Mental Age. 25. கொள்வாய்கள்.-Receptors. 26. Ha sir=#r-Senses 37. இயங்குவாய் *ēt-Effectors.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/53&oldid=813128" இலிருந்து மீள்விக்கப்பட்டது