பக்கம்:பாட்டுத் திறன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5(; பாட்டுத் திறன் முதுகு கடுநரம்பு: இது முகுளத்தில்" தொடங்கி முதுகு எலும்பு வரிசை என்னும் மூட்டுற்ற எலும்புக் குழலுள் அமைந்த நரம்புத் தொகுதியாகும். இது நீண்ட கயிறு போன் றது. இதில் முன்னும் பின்னுமாக இரண்டு வெடிப்புகள் உள்ளன. இதன் உட்பாகம், நரம்பணுக்களிருப்பதால், சாம்பல் நிறமானது: வெளிப்புறம் நரம்புக் கம்பிகள் இருப்பதால், வெண்ணிறமாகவுள்ளது. மேலே மூளைக்குச் செல்பவை உட் செல் நரம்புகளாகும். மூளையிலிருந்து கீழே வருபவை வெளிச் செல் நரம்புகளாகும். முதுகு நரம்பு அனிச்சைச் செயல்' களைக் கவனித்து வருகின்றது. எடுத்துக்காட்டாக, கம் புறங் கையில் ஒருவர் ஊசியாற் குத்தினால், உடனே யாதொரு யோசனையுமின்றி நாம் கையை இழுக்கின்றோம். மேலும், மூளையிலிருந்து வரும் செய்திகளைக் கழுத்திற்குக் கீழுள்ள பகுதிகளுக்கும், இப் பகுதிகளிலுள்ள உணர்ச்சிகளை மூளைக் கும் அனுப்பும் போக்குவரவுப் பாதையாக-அஞ்சல் கிலைய மாக-இது செயல் புரிகின்றது. முகுளம்; இது பெரு மூளைக்கு அடியில் பின்புறத்தில் முதுகு 5டுகரம்பின் தொடர்ச்சியாக உள்ளது. இது சிறு கோள வடிவமானது; மிகவும் முக்கியமானது. சுவாசித்தல், இதயத் துடிப்பு, குருதியோட்டம், செரிமானம் பற்றிய அனிச்சைச் செயல்களுக்கு இது காரணமாகின்றது. மேலும், தலையிலுள்ள புலன்களின் தசைகள் பற்றிய அனிச்சைச் செயல்களுக்கும் இதுவே இருப்பிடமாகும். அன்றியும், இது மூளையின் இதர பகுதிகளுக்கும் முதுகு நடுநரம்பிற்கும் நரம்புகள் செல்லும் பாதையாகும். இங்கே மேலும் கீழும் செல்லும் நரம்புகள் வலப்புறமிருந்து இடப்புறமாகவும், இடப்புறமிருந்து வலப் புறமாகவும் சென்று உடலின் இரு பக்கங்களையும் இணைக் கின்றன. சிறுமூளை: பெருமூளையின் பின் புறத்தில் முகுளத்திற்கு மேலாக நடு நரம்புத் தொகுதியின் நேர் வழியினின்று விலகியது போன்று இரு அரைக்கோளங்களாக அமைந்திருப்பது சிறு 16, ulei siri -Medulla oblongata, 17. 9 of #30 +3. Gouéo-Reflex action. 18. GuG Epsosir-Cereberum.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/62&oldid=813145" இலிருந்து மீள்விக்கப்பட்டது