பக்கம்:பாட்டுத் திறன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாட்டுத் திறன் குறைக்கப்பெற்றால், ஒருவிதத் தூக்கநோய் (coma) உண்டா கின்றது. இந்நோய் இன்சுலின் அதிர்ச்சி' என வழங்கப் பெறுகின்றது. காமச் சுரப்பிகள் : காமச் சுரப்பிகளை இணகோளங்கள்" என்றும் வழங்குவர். பெண்களிடமுள்ள சூற்பைகளும் ஆண் களிடமுள்ள விரைகளும் காமச் சுரப்பிகளாம்; முதல் நிலைப் பாலறி உறுப்புக்களாகும். இவை இரண்டும் இனப்பெருக்க உயிரணுக்களை (ஆண்களிடம் விந்து அணுக்களையும் பெண் களிடம் முட்டையணுக்களையும்) உற்பத்தி செய்வதுடன் வேறு சில இயக்கர்ேகளையும் சுரக்கின்றன. இந்த இயக்க நீர்கள் தனியாளின் வளர்ச்சியையும் நடத்தையையும் பாதிக்கின்றன. இந்த இயக்க நீர்கள் பல எண்ணிக்கையில் உள்ளன. இவற்றுள் ஒருசில ஆணிடமும் பெண்ணிடமும் உள்ளன. ஆண் இயக்கு நீர் களின் சமநிலை ஆண்தன்மையை வளர்ப்பதிலும். பெண் இயக்க நீர்களின் சமநிலை பெண்தன்மையை வளர்ப்பதிலும் கொண்டு செலுத்துகின்றன. நன்மையடையும் பருவத்தில்-அஃதாவது விரகறியும் பருவத்தில் (puberty)-இந்த இயக்குர்ேகள் பெண் களிடம் பெண்குறி உறுப்புக்களின் வளர்ச்சியைத் தாண்டு கின்றன.மேலும், இவை பெண்களிடம் பால்சுரப்பிகளை வளர்ப் பதிலும் ஆண்களிடம் தாடியையும் ஆழ்ந்த (தடித்த) குரலை உண்டாக்குவதிலும் தாண்டுதலை மேற்கொள்ளுகின்றன. இனகோளங்கள் இல்லையெனில், இருபாலாரின் தனியாளும் உறைப்பான பாலறி பண்புகளின்றியும் ஆண்மையும் பெண் மையும் ஒன்றாக இயைந்த அலிப்பிறப்பாகவும் வளர்ச்சிபெற நேரிடும். மாதவிடாய், முட்டை பக்குவமடைதல், கருப்பம், பால் சுரத்தல் போன்ற செயல்களை உள்ளிட்ட பெண்பாலாரிடம் அமைந்த இனப்பெருக்க அகச்செயல்கள் யாவும் இயக்கர்ேகளால் கட்டுப்படுத்தப் பெறுகின்றன. குழந்தையைப் பேணவேண்டும் என்ற தாய்மையுணர்ச்சியாம் உள் தூண்டல் எழுவதும் இயக்க: 46. * @ Girar 66 går -91$ ##st”–“Insulin shock” 47. காமச் சுரப்பிகள்-Sex glands, 48. இன கோளங்கள்-Gonads 49. Es į s» u Geir-Ovaries 50. sâs» o assir-Testes.. 51. In rāsāl-rū-Menstruation. 52. முட்டை பக்குவமடைதல்-Ovulation,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/85&oldid=813194" இலிருந்து மீள்விக்கப்பட்டது