பக்கம்:பாட்டுப் பாடுவோம்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மரம் ஏறலாம்


தென்னைமரத்தில் ஏறலாம்.

தேங்காயைப் பறிக்கலாம்.


மாமரத்தில் ஏறலாம்.

மாங்காயைப் பறிக்கலாம்.


புளியமரத்தில் ஏறலாம்.

புளியங்காயைப் பறிக்கலாம்.


நெல்லிமரத்தில் ஏறலாம்.

நெல்லிக்காயைப் பறிக்கலாம்.


வாழைமரத்தில் ஏறினால்,

வழுக்கிவழுக்கி விழுகலாம் !