இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
சாயல் மயிலே சாய்ந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு
சோழன் மகளே சாய்ந்தாடு
சித்திரை நிலவே சாய்ந்தாடு
சின்னக் கண்ணே சாய்ந்தாடு
தங்கச் சிலையே சாய்ந்தாடு
தாமரைப் பூவே சாய்ந்தாடு
முத்துச் சரமே சாய்ந்தாடு
முத்தந் தருவேன் சாய்ந்தாடு
10