இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வண்ணவண்ணப் பூச்சி
வண்ணத்துப் பூச்சி
வானவில்லைப் போல
வட்டமிடும் பூச்சி
தேனுண்ணப் பூவைத்
தேடிவரும் பூச்சி
துத்திப்பூப் பூச்சி
தும்பிக்கைப் பூச்சி
பஞ்சவர்ணப் பூச்சி
பறக்கும் பட்டுப் பூச்சி.
11