இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தழை தின்னும் ஆடு
தலையாட்டும் ஆடு
மேட்டுப் பட்டி ஆடு
மே மே மே
ஆலம்பாடிக் காளை
அழகான காளை
மயிலை நிறக் காளை
மா மா மா
தாவுகின்ற குரங்கு
தஞ்சாவூர்க் குரங்கு
ஊஞ்சலாடும் குரங்கு
உர் உர் உர்
14