இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கைராட்டைத் தாத்தா
கதர் வேட்டித் தாத்தா
பொக்கைவாய்த் தாத்தா
புன்சிரிப்புத் தாத்தா
ஆசிரமத் தாத்தா
ஆட்டுப்பால் தாத்தா
வெள்ளைக்காரன் ஆட்சியை
விரட்டிவிட்ட தாத்தா
ஈடில்லாத் தாத்தா
எங்கள் காந்தித் தாத்தா.
16