பக்கம்:பாட்டும் கதையும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஒன்று கண்ணே ஒன்று
உலகமெல்லாம் ஒன்று
இரண்டு கண்ணே இரண்டு
என் விழிகள் இரண்டு
மூன்று கண்ணே மூன்று
முத்தமிழும் மூன்று
நான்கு கண்ணே நான்கு
நாற்பொருள்கள் நான்கு
ஐந்து கண்ணே ஐந்து
கையில் விரல் ஐந்து
ஆறு கண்ணே ஆறு
அறுசுவைகள் ஆறு
ஏழு கண்ணே ஏழு
இனிக்கும் இசை ஏழு
எட்டுக் கண்ணே எட்டு
எண்திசைகள் எட்டு
ஒன்பது கண்ணே ஒன்பது
நவதானியம் ஒன்பது
பத்துக் கண்ணே பத்து
இருகை விரல் பத்து.

17

பா-2