பக்கம்:பாட்டும் கதையும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஆற்றங் கரையில் ஓர் நண்டு

அழகாய் ஆடித் திரிகையிலே

காற்றைப் போல விரைந்தோடிக்

காட்டு நரியும் வந்ததடா !


நரியைக் கண்ட அந்நண்டு

நடுக்கத் தோடு பயம் கொண்டு

விரைவில் பொந்தில் புகுந்ததடா

வீணாய் நரியும் நின்றதடா !


வாலைப் பொந்தில் விட்டதடா

வாலால் நண்டைத் தொட்டதடா

கோல நண்டும் நரிவாலைக்

கொடுக்கால் துண்டு செய்ததடா.

18