பக்கம்:பாட்டும் கதையும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருநாள் ஆற்றங் கரையை நோக்கி நரியொன்று வேகமாக ஓடிவந்தது. கரையில் திரிந்து கொண்டிருந்த ஒரு நண்டு, நரியைக் கண்டதும் தன் வளைக்குள் சென்று மறைந்து கொண்டது. ஏமாற்றத்தோடு நின்ற நரி, தன் வாலை வளைக்குள் விட்டது. நண்டு சினங்கொண்டு வஞ்சக நரியின் வாலைக் கொடுக்கால் துண்டு செய்தது.

"எதிரியின் இருப்பிடத்திற்குச் சென்று
நாம் வாலாட்டக் கூடாது."



19