இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பச்சைக் கிளியே! பச்சைக் கிளியே!
பறந்து வருவாயா?
பறந்து வந்து கோவைக் கனியைப்
பறித்துத் தருவாயா?
சொக்குப் பச்சைச் சுந்தரி யம்மா
சும்மா வாயேண்டி
பக்கம் வந்தே அக்கா என்று
பாட்டுச் சொல்லேண்டி
தென்னங் கீற்றில் ஊஞ்ச லாடத்
தினமும் வருவாயா?
கன்னம் என்ற தேமாங் கனியைக்
கடிக்க வருவாயா?
26